ETV Bharat / state

செய்தியாகும் பிரபலங்களின் அந்தரங்கங்கள்! எல்லை மீறலாமா? - Suchitra Issue

பிரபல நடிகர்களின் பெயர்களைக் குறிப்பிடும் எந்த செய்தியும் இணையதளத்தில் வாசகர்களை ஈர்ப்பது இயல்பு தான். ஆனால் பிரபலம் ஆனாலும், அவர்களின் அந்தரங்கங்களை பொது வெளியில் விவாதிப்பதும், செய்தியாக்குவதும் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்குகளை எதிர்கொள்ளச் செய்வதோடு ஊடக அறமும் இல்லை என்பதை உணர வேண்டும்.

Suchitra image
பாடகி சுசித்ரா மற்றும் இணையக் குற்றத் தடுப்பு வல்லுநர் முரளி கிருஷ்ணனின் புகைப்படம் (Credit: suchitra_2_6253251 & ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 5:17 PM IST

Updated : May 17, 2024, 6:31 PM IST

இணைய குற்றத் தடுப்பு நிபுணர் மற்றும் உண்மை சரிபார்ப்பு நிபுணர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சுச்சி லீக்ஸ் (Suchi Leaks) என்ற பெயரில், பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கிலிருந்து பல்வேறு புகைப்படங்கள், விமர்சனங்கள் 2017ஆம் ஆண்டில் வெளியானது அனைவரும் அறிந்ததே. இவற்றுக்கும், தனக்கும் தொடர்பு இல்லை எனவும், தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும் சுசித்ரா மறுத்திருந்தார்.

இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது, சுசித்ராவின் பேட்டியாலும் அதில் கூறப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களாலும் மீண்டும் ஒரு விவாதம் எழுந்துள்ளது. சுசித்ரா தனது கணவர் கார்த்திக் குமார் மட்டுமின்றி, திரையுலகப் பிரபலங்கள் பலரின் பெயர்களையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். தனிநபர்களின் அந்தரங்கங்கங்களை எல்லை மீறி ஆராயும் இந்த பேட்டி ஊடக அறம் சார்ந்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இது மட்டுமின்றி இசையமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்தும் பொது தளத்தில் விவாதிக்கப்பட்டு, பிரிந்த இணையர் சேர்ந்து அறிக்கை விடுத்து கண்டிக்கும் அளவிற்கு நிலைமை ஏற்பட்டது.

பிரபலங்களாக இருப்பவர்களின் அந்தரங்க விவகாரங்கள் பொதுவெளியிலும், ஊடகங்களிலும் விவாதிக்கப்படும் நிலையில், இணைய குற்றத் தடுப்பு நிபுணர் மற்றும் உண்மை சரிபார்ப்பு நிபுணர் முரளிகிருஷ்ணன் சின்னதுரையுடன் விவாதித்தோம். அவர் கூறியதாவது, "தனிநபர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருக்கிறதா என்பதை பார்த்து தான் ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிட வேண்டும். நேரலையில் ஒருவர் மீது தனிப்பட்ட ரீதியாக குற்றம் சுமத்தினாலும், அதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்பதை ஊடக நெறியாளர் கேட்க வேண்டும்.

சில இடங்களில் ஊடக நெறிமுறைகளை கடைபிடிக்காமல் அந்தந்த நேரத்தின் பரப்பரப்புகாக செய்தியை வெளியிடுவதை நோக்கமாக வைத்துள்ளனர். ஒருவர் தனிப்பட்ட முறையில் ஒருவர் மீது குற்றம் சுமத்துகிறார்கள் என்றால், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும் அதற்கான விளக்கங்களை பெற வேண்டும்.

இசையமைப்பாளரும், பாடகியும் மணமுறிவு செய்கிறார்கள் என்றால், மணமுறிவு என்பது மட்டும் தான் செய்தி. பிரபலங்கள் மணமுறிவு என்பதற்கான முடிவை இருவரும் சேர்ந்து எடுத்துவிட்டால், அது அவர்களுடைய தனிப்பட்ட உரிமைக்கானவை. அவை நல்லதா? கெட்டதா? எதற்காக இருவரும் பிரிந்தார்கள் என்பதை வெளிப்படுத்தத் தேவையில்லை. அதே போன்று சேர்ந்திருக்கும் போது எடுக்கப்பட்ட பேட்டியையும் தற்போது வெளியிடுவது தவறு தான்" என குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒருவர் தனிப்பட்ட ரீதியாக ஒருவரை (பாலியல் ரீதியிலான) குற்றச்சாட்டுடன் விமர்சிக்கிறார் என்றால், அவை உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது மக்களுக்கு தெரிய வருவதால், மக்களுக்கு என்ன பயன் இருக்கப் போகிறது?" என வினவும் அவர், "மற்றவர்களின் தனி உரிமையை பாதிப்படையச் செய்வது, ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதை எல்லாம் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்" என வேண்டுகோள் விடுக்கிறார்.

இதே போன்று, "பிரபலங்கள் பற்றி தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் விரும்புகிறார்கள் என்றாலும், அதற்கான எல்லை இருக்கிறது. தனிப்பட்ட உரிமை மீறும் போது, பாதிக்கப்பட்டவர்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கலாம். இயல்பான மனநிலை இல்லாதவர்கள் கூறும் தகவலின் உறுதித் தன்மை நம்ப முடியாது என்பதால், அவர்களிடம் நேர்காணல் எடுக்கக் கூடாது என்ற அடிப்படையான புரிதலும் செய்தியாளர்களுக்கு தேவை" என முரளி கிருஷ்ணன் சின்னதுரை கூறுகிறார்.

"ஒரு செய்தியை வெளியிடுவதன் நோக்கம் மக்களுக்கு எந்த மாதிரியான நன்மை தருகிறது என்பதாகத்தான் இருக்க வேண்டும். மக்களுக்கு பயன் இல்லாத வகையில் ஒரு செய்தி இருக்கிறது என்றால், அதன் நோக்கம் பணமாகவோ, வேறு ஒன்றாகவோ தான் இருக்க முடியும்" எனவும் அவர் கூறுகிறார்.

குறிப்பாக சுசித்ரா பேட்டியைப் பொறுத்தவரையிலும், அவரது விவாகரத்து வழக்கின் போதும் அவரது மனநிலை ஒரு காரணமாக குறிப்பிடப்பட்டது. இந்தச் சூழலில் பிரபலங்களின் அந்தரங்கங்களை விமர்சிக்கும் சுசித்ராவின் பேட்டியும், அதிலிருந்து செய்யப்படும் விவரனைகளும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தோனியின் இறுதிப்போட்டி சென்னையில் நடக்க மற்ற அணிகள் என்ன செய்ய வேண்டும்? - Ipl Playoff Chances

Last Updated : May 17, 2024, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.