ETV Bharat / state

"இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதே நாடாளுமன்றத் தேர்தலின் கருப்பொருள்" - சு.வெங்கடேசன் பேட்டி - Su Venkatesan Nomination - SU VENKATESAN NOMINATION

Su Venkatesan Nomination: நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பைக் காப்பாற்றுவதே கருப்பொருளாகக் கொண்டுள்ளது என்று வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Su Venkatesan Nomination
Su Venkatesan Nomination
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 10:27 PM IST

Updated : Mar 25, 2024, 10:51 PM IST

Su Venkatesan Nomination

மதுரை: நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தல் தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் சூழலில், தமிழகத்தை பொருத்தமட்டில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணிகள் மற்றும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உள்ளது. இதன் காரணமாக, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். மேலும், வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் மார்ச் மாதம் 27ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தங்களுடைய வேட்புமனுவை இன்று (மார்ச் 25) தாக்கல் செய்துள்ளனர்.

அதில் ஒருபகுதியாக, மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, திமுக அமைச்சர்கள் பி.மூர்த்தி மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் தளபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும், சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு மாற்றாக சி.பி.எம் புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கு முன்னதாக, திருவள்ளுவர் சிலை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதன் தொடர்ச்சியாக, செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறுகையில், "இந்தியாவில் இதுவரை நடைபெற்ற 17 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஆட்சி மாற்றமே கருப்பொருளாக இருந்தது, 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பைக் காப்பாற்றுவதே கருப்பொருளாகக் கொண்டுள்ளது.

ஜனநாயகம், அரசியலமைப்பைக் காப்பாற்ற இந்திய அளவில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜக ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும், தமிழகத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.

மேலும், 3 ஆண்டுகளில் திமுக தலைமையிலான அரசு மதுரைக்கு செய்துள்ள திட்டங்கள், அமைச்சர்கள் உருவாக்கிய அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நாங்கள் செய்த சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிப்போம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்" என நம்பிக்கையுடன் கூறினார்.

இதையும் படிங்க: சின்னத்தைப் பார்த்து ஓட்டு போடாதீங்க.. எத்தனை தேர்தல், தலைவர்கள் வந்தாலும் என் மக்கள் நிலை மாறவில்லை - தங்கர் பச்சான் ஆவேசம்!

Last Updated : Mar 25, 2024, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.