ETV Bharat / state

திருவண்ணாமலையில் மர்ம நோய் தாக்கி மாடுகள் உயிரிழப்பு.. கால்நடை மருத்துவர் கூறுவது என்ன? - Cows died in Tiruvannamalai

Cows died: திருவண்ணாமலை பொன்னூர் கிராமத்தில் மர்ம நோய் தாக்கி மாடுகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மர்ம நோய் தாக்கி உயிரிழந்த மாடுகள்
மர்ம நோய் தாக்கி உயிரிழந்த மாடுகள் (Credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 3:35 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பொன்னூர் ஏரியில் தினந்தோறும் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து வந்து செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக பொன்னூர் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் வாழும் காட்டுப்பன்றியைப் பிடிக்க வெடிவைத்த நிலையில், காட்டுப்பன்றி வாய் பகுதி கிழிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளது. காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்கு யாரோ மர்ம நபர்கள் காட்டுப் பகுதியில் வெடி மருந்துகளை வைத்ததாக பொதுமக்கள் புகார்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், பொன்னூர் கிராமத்தில் காட்டை ஒட்டிய ஏரி பகுதியில் ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திடீரென 11 மாடுகள், 5 ஆடுகள் இறந்து போனதாக கூறப்படுகிறது. அதில், நேற்று முன்தினம் மட்டும் இரண்டு பெரிய பசுக்களும் ஒரு கன்றுக் குட்டியும் என‌ மூன்று மாடுகள் திடீரென ஒரே நாளில் இறந்த காரணத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும், இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாடுகள் இறப்பு குறித்து பொன்னூர் கால்நடை மருத்துவர்களிடம் கேட்ட போது, சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த மாட்டின் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி கிடைத்த தகவல்களில், இறந்த மாடுகளுக்கு மர்ம நோயான ஆந்திராக்ஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த வகை ஆந்திராக்ஸ் கிருமித் தொற்றானது காட்டுப் பகுதிகளில் இறந்து புதைக்கப்படாமல் வெளியிலே வீசப்பட்ட மிருகங்களிலிருந்து பரவும் ஒருவகை நோயாகும்.

மேலும், அதற்குரிய நோய்த்தடுப்பு மருந்துகளை உடனடியாக நாளை மறுநாள் வரவழைத்து பொன்னுரைச் சுற்றியுள்ள 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாடுகளுக்குச் செலுத்தி பாதுகாக்கப்படும் எனவும், இந்த நோய்த் தொற்று அபாயம் நீக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும், தற்போது இறந்த மாடுகளை ஆழமாகக் குழி தோண்டி புதைத்து விடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரியில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு! - African Catfishes Destroyed

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.