தென்காசி: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார்(32). இவர் அதேப் பகுதியில் தனியார் டிப்ளமோ நர்ஸிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அந்தக் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவரிடம் வினோத்குமார் அடிக்கடி பாலியல் ரீதியான தொந்தரவுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வினோத் குமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, வினோத் குமாரை காவல்துறையினர் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பாரா மெடிக்கல் கல்லூரியை ஆய்வு நடத்தி சீல் வைத்தனர். கல்லூரியில் படித்த மாணவிகள் அவர்களின் படிப்பைத் தொடர வேறு கல்லூரிக்கு மாற்ற ஏற்பாடு மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரித்தனர்.
போக்சோ சட்டத்தில் கல்லூரி தாளாளரின் கைது நடவடிக்கையையடுத்து, போலீசார் மற்றும் அதிகாரிகள் கல்லூரிக்கு இரவில் சீல் வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தருமபுரியில் கூலி வேலைக்குச் சென்ற பட்டியலினப் பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் - இருவர் கைது!