சென்னை: திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஆவடி மாநகர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, திருவள்ளூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று (17.07.2024) – திருமுல்லைவாயில், மங்களம் திருமண மஹாலில் திருவள்ளூர் தெற்கு, வடக்கு மற்றும் ஆவடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
— Selvaperunthagai K (@SPK_TNCC) July 18, 2024
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் கட்டமைப்பு, வளர்ச்சி… pic.twitter.com/ip6yK4Nr6J
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம், காங்கிரஸ், கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளை தன்னுடைய ஓட்டுகளாக கூறிக் கொள்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “அண்ணாமலை பாமக, ஓபிஎஸ், அமமுக, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளின் வாக்குகளை தன்னுடைய வாக்குகள் என்று கூறிக்கொள்கிறார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார். குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நடந்த கொலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆட்சியில் குறைவாக நடந்துள்ளதாக கணக்குள் கூறுகின்றது. ஆனால், இவற்றை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பது காங்கிரஸின் கருத்து” இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு நிலையத்தை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை துவங்கி வைத்தார். அப்பொழுது பேசிய அவரிடம், அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தூப்பாக்கிச் சூட்டில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று இந்தியாவில் இந்து அமைப்பினர் யாகம் நடத்துவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “டிரம்பின் கூட்டாளி இந்தியாவில் பிரதமராக உள்ளார். நமது பிரதமர் ஏற்கனவே அமெரிக்கா சென்று டிரம்பிற்காக வாக்கு சேகரித்தவர்.
மின் கட்டண உயர்வு என்பது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு வரையில் மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட மறுத்தார். ஆனால், அதற்கு பின் ஆட்சி அமைத்தவர்கள் அதில் கையெழுத்திட்டனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை முழுமையாக மத்திய அரசு எடுத்துள்ளது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதால் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு புது வாழ்வு கொடுத்த தருமபுரி அரசு மருத்துவமனை!