ETV Bharat / state

"ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அரசு மரியாதையுடன் தகனம்" - தமிழக அரசு தகவல்! - CONGRESS EVKS ELANGOVAN DEATH

மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளக்கோவன்
மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளக்கோவன் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2024, 12:30 PM IST

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் சமீப காலமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் நேற்று (டிச.14) சென்னையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது இறப்பிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது உடல் சென்னை மரக்காணம் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன், தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும், ஈ.வெ.கி.சம்பத் - சுலோசனா சம்பத் தம்பதியரின் மகனும் ஆவார். இவர் 1948ஆம் ஆண்டு, டிசம்பர் 21ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக 1996 முதல் 2002 வரை பணியாற்றினார்.

2004இல் நாடாளுமன்ற உறுப்பினராக கோபிசெட்டிபாளையம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒன்றிய அரசில் ஜவுளித்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் பணியாற்றினார். தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றினார்.

இதையும் படிங்க: "ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கல்கள்" - ஜி.கே.மணி பேச்சு! - ONE NATION ONE ELECTION

அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வு என அனைத்து தளங்களிலும் நீண்ட அனுபவம் கொண்டவர். இந்நிலையில் அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது பொது வாழ்வைப் போற்றும் விதமாக அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.