ETV Bharat / state

கமல்ஹாசன் பிரச்சார கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆள் சேர்த்ததாக புகார்; வைரலாகும் வீடியோ! - kamal haasan erode campaign

Kamal Haasan Erode campaign: ஈரோட்டில் கமல்ஹாசனின் பிரச்சாரக் கூட்டத்திற்கு திமுகவினர் பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வந்ததாகவும், அதற்கான வீடியோ பதிவுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் பிரச்சார கூட்டத்திற்கு திமுகவினர் பணம் கொடுத்து ஆள் சேர்த்ததாக புகார்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 6:31 PM IST

கமல்ஹாசன் பிரச்சாரம்

ஈரோடு: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நேற்று ஈரோட்டில் இருந்து தனது பிரச்சார பயணத்தை தொடங்கினார். ஈரோடு வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையத்தில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்தில் அவர் வாக்குகள் சேகரித்தார்.

இந்த கமல்ஹாசனின் பிரச்சார கூட்டத்திற்கு, திமுகவினர் பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வந்ததாகவும், அதற்கான வீடியோ பதிவுடன் எக்ஸ் வலைத்தளத்தில் பூங்கொடி சுங்கத் என்பவர் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், எக்ஸ் வலைத்தளத்தின் மூலம் அந்த வீடியோவை காவல்துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பதில் அளித்துள்ளார். முன்னதாக, சேலத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது தேர்தல் பிரச்சாரம் குறித்து இருவரும் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மக்களையே காணாத அமைச்சருக்கு களம் எப்படி தெரியும்? - எல்.முருகன் பேச்சுக்கு அதிமுக நீலகிரி எம்பி வேட்பாளர் பதிலடி - AIADMK Lokesh Tamilselvan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.