ETV Bharat / state

கும்பகோணத்தில் பல கோடி மதிப்பிலான சொத்து 17 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக போலீசில் புகார்! - TELC School Selling With Fake Documents - TELC SCHOOL SELLING WITH FAKE DOCUMENTS

TELC School Sold For Low Price: கும்பகோணத்தில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்கு சொந்தமான தொடக்கப் பள்ளி அமைந்துள்ள இடத்தை போலி ஆவணங்கள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து மோசடி நடைபெற்றுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

TELC-க்கு சொந்தமான பள்ளி
TELC-க்கு சொந்தமான பள்ளி (Image Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 1:27 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகரின் முக்கிய பகுதியான மகாமக குளம் அருகே தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்கு (TELC) சொந்தமான நூற்றாண்டுகள் கடந்த பழமையான தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான அந்த பள்ளி மற்றும் அது அமைந்துள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து மோசடி நடந்துள்ளதாகக் கூறி, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் முன்னாள் ஆயர் டேனியல் ஜெயராஜ், கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், 'கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்கு (TELC) சொந்தமான நூற்றாண்டுகள் கடந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தொடக்கப் பள்ளிக்கு, இரு ஆண்டுகளுக்கு முன்பு நான் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பாச்சூர் கைவண்டூர் கிராமம் கலைஞர் நகரைச் சேர்ந்த ஜான் என்பவரது மகனான ஜான் சாமுவேல் என்பவரை சொத்து அதிகாரியாக நியமித்தது போல போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளனர்.

மேலும் அதனை ஆதாரமாக கொண்டு, கடந்த 2024 ஏப்ரல் 4ஆம் தேதி கும்பகோணம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண் 1891ஆக, கும்பகோணம் அருகேயுள்ள கடிச்சம்பாடி உடையார் தெருவைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகன் சக்தி என்பவருக்கு ஜென்ரல் பவர் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பவர் பத்திரத்தைத் துணையாக கொண்டு, கடிச்சம்பாடி சக்தி என்பவர் பள்ளி கட்டிடத்துடன் கூடிய காலி மனையை, முழுமையாக காலி மனை என்று குறிப்பிட்டு பத்திரப்பதிவு துறையினரின் துணையோடு, கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சொத்தை ரூபாய் 17 லட்சத்து 81 ஆயிரத்து 200க்கு சென்னையைச் சேர்ந்த ரவி என்பவருக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்' என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், ' நான் யாரையும் சொத்து அலுவலராக நியமனம் செய்யவில்லை. எனது லெட்டர் பேடை சிலர் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆகவே, இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் போலி ஆவணங்கள் மூலம் பள்ளி விற்பனை செய்யப்பட்ட ஆவண பதிவை ரத்து செய்ய வேண்டும்" என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே புகார் மனு, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் அளிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், இந்த ஆவணங்கள் அனைத்து உண்மையானது தான் என்றும், முன்னாள் ஆயர் தான் சொத்து அலுவலராக ஜான் சாமுவேலை நியமித்தார் என்றும், அவரது உதவியாளராக செயல்பட்டு வந்த டென்னீஸ் என்பவர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் சொத்து அலுவலரிடமிருந்து கிரயம் பெற்ற கடிச்சம்பாடி சக்தி என்பவர் இதுகுறித்து தனியே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், அதற்கான முழுமையான ஆவணங்கள் தங்களிடம் உள்ளது என்றும் டென்னீஸ் கூறியுள்ளார்.

இதனிடையே, முன்னாள் ஆயருக்கு எதிராக கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் தனி புகார் இன்று அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீதான சைபர் கிரைம் வழக்கு.. சொந்த ஜாமீனில் விடுவிக்க மகிளா நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.