ETV Bharat / state

ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி- அதிமுக முன்னாள் அமைச்சர் மீது தொழிலதிபர் புகார்! - ADMK ex minister land scam case - ADMK EX MINISTER LAND SCAM CASE

ADMK ex-minister land scam case: 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தினை மோசடி செய்து பத்திரப்பதிவு செய்தும், புகார் அளித்த தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குறித்து தொழிலதிபர் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

land scam case
நில மோசடி குறித்து புகார் அளித்தவர் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 3:37 PM IST

நில மோசடி குறித்து புகார் அளித்தவர் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

கரூர்: மண்மங்கலம் தாலுக்கா, குப்பிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் நேற்று (ஜூன்.14) கரூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், "நாமக்கலில் சுமதி & கோ என்ற நிறுவனத்தையும், பரமத்தி வேலூரில் சுமதி & கோ மற்றும் சுமதி டிரேடர்ஸ் என்ற பெயரில் எனது மனைவி மற்றும் உறவினர்களின் பெயரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறேன். கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்பவர், அவரது தம்பியான சேகர் என்பவர் மூலமாக அறிமுகமாகி, எங்களுக்குள் பல வருடங்களாக பணம் கொடுக்கல் வாங்கல் வரவு செலவு இருந்து வந்தது.

அதிமுக, கரூர் மாவட்ட செயலாளராக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அவரது உத்தரவின் பேரில், அவருடைய பினாமிகள் மூலம் எடுக்கப்பட்ட, அரசு காண்ட்ராக்ட்களுக்கு, எலக்ட்ரிக்கல் மெட்டீரியல்கள் அதிகளவில் அனுப்பினேன். அவர் அமைச்சராக இருந்த போது, அவரது குடும்ப உறுப்பினர்கள் ரெயின்போ ட்ரையர்ஸ் (Rainbow dyers), ரெயின்போ ப்ளூ மெட்டல்ஸ் (Rainbow Bluemetals), ரெயின்போ இன்போடெக் (Rainbow Infratech), ஆரியூர் செல்லாண்டியம்மன் ட்ரான்ஸ்போர்ட் (Ariyur Sellandiamman Transports) ஆகிய நிறுவனங்களுக்கு கோடி ரூபாயை வங்கி கணக்கிலும் மற்றும் அவருக்கும் அவரது தம்பி சேகருக்கும் நேரடியாக, ரொக்க பணமாகவும் 10 கோடி ரூபாய் நம்பிக்கை அடிப்படையில் கடனாக வழங்கினேன்.

எங்களுக்குள் இருந்த உறவில் திடீரென எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நடவடிக்கைகள் காரணமாக தங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம், குன்னம்பட்டி, மற்றும் தோரணக்கல்பட்டியில் உள்ள சுமார் 100 கோடி ரூபாய் மார்க்கெட் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, அவர் சொல்லும் நான்கு நபர்களுக்கு எழுதித் தரும்படி மிரட்டி வந்தார். இதனால், சொத்தை எனது மகள் சோபனா பெயரில், கடந்த 08-02-2024 அன்று, தானச் செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்துவிட்டேன்.

பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், மற்றும் பிரவீனும், கூட்டாக சேர்ந்து என்னுடைய சொத்துக்களை அபகரிப்பு செய்ய திட்டமிட்டு , கடந்த 27-02-2024 அன்று எனது இல்லம் அமைந்துள்ள கரூர் அருகே உள்ள வாங்கல் காட்டூருக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அடியாட்களுடன் வந்தனர். அப்போது வீட்டிற்கு பின்னால் தோட்டத்திற்கு என்னை அழைத்துச் சென்று, தனது மகள் சோபனா பெயரில் எழுதப்பட்ட செட்டில்மெண்ட் பத்திரங்களின் அசல் ஆவணங்கள் இருக்கும் இடம் குறித்து கேட்டு என்னை மிரட்டினார்கள்.

நான் கூற மறுத்த போது என்னை அவர்களது காரில் கொண்டு போய் வைத்து அசல் பத்திரத்தைக் கேட்டு தாக்கினார்கள். மேலும் இனி எந்த காலத்திலும் வேலூர் எலக்ட்ரிக்கல் கடைக்கோ, வீட்டிற்கோ வரக்கூடாது என்றும் சொல்லி எனக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து, எனது பெயரில் உள்ள மற்றச் சொத்துக்களையும் பிரவீன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.

பின்னர் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதியன்று வாங்கல் வீட்டில் நான் மதியம் தனியாக இருந்த போது, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் பிரவீன் அடியாட்களுடன் வந்து எனது மகளின் பெயரில், நான் எழுதிவைத்த செட்டில்மெண்ட் பத்திரங்களினுடைய அசல் ஆவணங்களைக் கேட்டு, என்னை முதுகில் பலவந்தமாக தாக்கியதுடன், ஏதோ குடிக்கச் சொல்லி வாயில் ஊற்றினார்கள். பின்னர் அன்றைய தினம் நடு இரவில் எனக்கு மயக்கம் வருவது போல் இருந்ததால், எனது அண்ணன் மகேஷ்வரனை தொடர்பு கொண்டு அவரின் மூலம் கரூர் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டேன்.

மேற்படி மருத்துவமனையில் அனுமதிக்கும் போது நான் சுயநினைவை இழந்த நிலையில், நான் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உடனடியாக கோவையில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பின்னர் மீண்டும் உடல் நிலை மோசமானதால், கிட்டதட்ட 2 வாரங்கள் வரை சிகிச்சைப் பெற்றேன்.

இந்த சமயத்தில் நான் மருத்துவமனையில் இருப்பதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரவீன், மற்றும் அவருடன் இருக்கும் பலரும் சேர்ந்து எனது மகள் சோபனா மற்றும் மனைவி சசிகலா ஆகியோர்களை மிரட்டி நான் எனது மகள் சோபனாவுக்கு எழுதிக் கொடுத்த தோரணக்கல்பட்டி (மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகம் ஆவண எண். 884/2024)

காக்காவடி கிராமம், குன்னம்பட்டியிலுள்ள (வெள்ளியணை சார்பதிவாளர் அலுவலகம் ஆவண எண்கள்.556/2024 மற்றும் 557/2024) ஆகிய சொத்துக்களை கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் தேவராஜ் மகன் ரகு, ஈரோடு மாவட்டம் முத்துச்சாமி மகன் சித்தார்த்தன், கரூர் மாவட்டம் நாச்சியப்பன் மகன் மாரப்பன், சுரூர் மாவட்டம் செல்லமுத்து மகன் செல்வராஜ் ஆகியோர்களின் பெயரில் மோசடியாக ஒரு கிரைய பத்திரம் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் (ஆவண எண்.P/38/2024) பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி எனது மகள் சோபனாவுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட செட்டில்மெண்ட் பத்திரத்தின் அசல் என்னிடம் இருந்த போது, அந்த ஆவணங்கள் தொலைந்துவிட்டதாகவும் அந்த ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து கொடுக்கப்பட்டதாக பொய்யான, Non Traceable Certificate-ஐ கரூர், மேலக்கஞர் சார்பதிவாளர் வசம் கொடுத்து (ஆவண எண் P/38/2024) Pending பத்திரம் 10-05-2024 அன்று Regular பத்திரமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக கடந்த மே 11ஆம் தேதியன்று கரூர், மேலக்கருர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அசல் ஆவணங்கள் என்னிடம் உள்ளன.

போலியான Non Traceable Certificate கொடுத்து பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து, அசல் ஆவணங்களை கிரையம் பெற்ற நபர்களிடம் ஒப்படைக்க கூடாது என்று சொல்லி மனு கொடுத்தேன். இதனால் ஆத்திரம் அடைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது தம்பி சேகர் மற்றும் பிரவீன் அவருடன் வந்த 10 நபர்கள் என்னை கடத்தி சென்று அடித்து துன்புறுத்தினர்.

பின்னர் வங்கித் தொடர்பான காசோலைகள் மற்றும் வெற்று ஆவணங்களில் தன்னுடைய கை ரேகையை பதிவு செய்து கொண்டு சென்றுவிட்டனர். இதனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில்" தெரிவித்துள்ளார். கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன், "குடும்ப நண்பர்கள் போல பழகி வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குடும்பத்தினர், பல மோசடியான செயல்களை செய்து எனது சொத்தை அபகரித்து விட்டார். என்னை அடித்து துன்புறுத்தி வலுக்கட்டாயமாக கையொப்பங்கள் பெற்றுச் சென்றுள்ளனர்.

இவருக்கு ஆதரவாக கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவராக உள்ள வழக்கறிஞர் மாரப்பன் உள்ளிட்டோர் தனக்குள்ள அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி எனது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படுத்தலாம். எனவே காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார். இதனிடையே இந்த வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிங்க: "விவசாயிகளுக்கு எதிராக ஸ்டாலின் செயல்படுகிறார்" - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு! - p r pandian

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.