ETV Bharat / state

சத்துணவில் முட்டைகள் எண்ணிக்கை குறைவு..! சத்துணவு அமைப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய ஆட்சியர் உத்தரவு! - nutrition organizer suspend

nutrition food organizer suspend: கும்பினிபேட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் குறைவாக இருந்ததால், சத்துணவு அமைப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

collector inspects at Kumpinipet government school and suspends the nutrition food organizer
கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 9:26 AM IST

கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்

ராணிப்பேட்டை: உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் வளர்மதி, அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று (ஜன.31) ஆய்வு நடத்தினார்.

அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தடையின்றி விரைவாக மக்களைச் சென்றடையும் வகையில், கிராமங்களில் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் தங்கும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் நேற்று (ஜன.31) நடைமுறைக்கு வந்தது. இவற்றின் மூலமாக மக்கள் குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். இதில், பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு வழங்குவதை ஆய்வு செய்ததில், 7 மாணவர்களுக்குச் சத்துணவு முட்டை குறைவாக இருந்துள்ளது. இதனையடுத்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு பொருள்கள் இருக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார்.

இந்த ஆய்வில், மாணவர்களுக்குத் தேவையான சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர், மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு, இப்பள்ளியின் சத்துணவு பொருள்களை வேறு பள்ளியில் இறக்கி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், சத்துணவு பதிவேடுகளை முறையாகப் பராமரிக்காதது, மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் குறைவாக இருப்பு உள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, சத்துணவு அமைப்பாளர் மலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்பட்டுள்ளதா? பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால், அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானின் மேல்முறையீடு மனுவிற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.