ETV Bharat / state

கோவை மேயர் ராஜினாமா ஏன்? - அதிமுக கவுன்சிலர் கேள்வியால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு! - Coimbatore Mayor resignation

Coimbatore Mayor resignation: கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தமது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்திருந்த நிலையில், மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சிறப்புக் கூட்டம்
கோவை மாநகராட்சி சிறப்புக் கூட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 4:57 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி முதல் பெண் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் கடந்த 3ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, அதற்கான கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினார். உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் திமுக, அதிமுக, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்த்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மேயர் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பது பொருளாக வைக்கப்பட்டது. ஜூலை ஒன்றாம் தேதியிட்ட கடிதத்தில் மேயர் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி இருப்பதாக துணை மேயர் வெற்றிச்செல்வன் மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்தார்.

அதன் பின்னர், மேயர் கல்பனாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, 47வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும், அதிமுகவின் செ.ம.வேலுச்சாமி மேயராக இருந்து ராஜினாமா செய்தபோது விவாதம் நடத்தினீர்களா என கேட்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. அதனையடுத்து கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மாநகராட்சி கூட்டம் துவங்கிய 9 நிமிடத்திலேயே நிறைவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர், அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இன்று நடந்த கூட்டத்தில் மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ராஜினாமா தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, கல்பனா ஆனந்தகுமார் செயலற்ற மேயராக இருந்தார் என பலமுறை மன்றத்தில் தெரிவித்து இருந்தோம்.

கோவை மாநகராட்சியில் கடந்த இரண்டரை வருடங்களாக ஊழலை தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல, முதலமைச்சர் மேயரை ராஜினாமா செய்ய வைத்துள்ளார். மேயர் நேரடியாக ராஜினாமா கடிதம் தராமல் உதவியாளர் மூலம் தந்துள்ளார், அவர் அந்த பொறுப்பிற்கு உரிய மதிப்பு தெரியாதவராக உள்ளார்.

மேயர் கல்பனா ஆனந்தகுமார் என்னென்ன ஊழல் செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதற்காக சிறப்பு தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மேயர் இல்லாத இந்த நேரத்தில் மாநகராட்சி ஆணையாளர் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும். மேயர் கல்பனா பதவி விலகியதற்கான காரணத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" எனக் கூறினார்.

இந்நிலையில், மாநகராட்சியின் சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ராஜினாமா தீர்மானம், மாவட்ட ஆட்சியர் மூலம் நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட உள்ளது. பின்னர் மாநில தேர்தல் ஆணையம் மேயர் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: ஜூலை 8-ல் கூட்டம்.. நெல்லை மேயர் ராஜினாமா பின்னணி என்ன? முன்னாள் மாவட்டச் செயலாளரின் சூழ்ச்சியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.