ETV Bharat / state

"எங்க ஊர்ல பஸ் நிற்காதா?" - பேருந்தை சிறைபிடித்த ஊர்மக்கள்! - Coimbatore Karumathampatti bus - COIMBATORE KARUMATHAMPATTI BUS

Coimbatore Bus Stop Fight: கோயம்புத்தூரில் உள்ள கருமத்தம்பட்டி என்ற ஊரில் பேருந்து நிற்காது எனக் கூறி ஊர்மக்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பேருந்தை ஊர்மக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் வாக்குவாதம் செய்யும் ஊர்மக்கள்
பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் வாக்குவாதம் செய்யும் ஊர்மக்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 5:45 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூருக்கு ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 5) காலை காந்திபுரத்தில் திருப்பூர் செல்லும் தனியார் பேருந்தில் கருமத்தம்பட்டி செல்வதற்காக சில பயணிகள் ஏறி உள்ளனர்.

பேருந்தை சிறைபிடித்த ஊர்மக்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

பேருந்து கிளம்பிய நிலையில் நடத்துநர் கருமத்தம்பட்டியில் பேருந்து நிற்காது என கூறி அவர்களை திட்டி பாதி வழியிலேயே இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள், இது குறித்து ஊர்பொது மக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடந்து பேருந்து கருமத்தம்பட்டி அருகே வந்தபோது சுற்றி வளைத்து சிறைபிடித்த ஊர் பொதுமக்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஊர் பொதுமக்கள் பேருந்தை தடுத்து, நிறுத்தி சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “திருந்தி வாழ்வது பிடிக்கவில்லையா?” நெல்லை ஆட்சியரகத்தில் இளைஞர் திடீர் வாக்குவாதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.