ETV Bharat / state

தொழிலாளியின் தொடையில் பாய்ந்த ஏர்கன் குண்டு.. சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்! - surgery - SURGERY

கட்டிட தொழிலாளி ஒருவரின் தொடையில் ஆழமாக பாய்ந்த ஏர்கன் குண்டை கோவை அரசு மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபருடன் மருத்துவக் குழுவினர்
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபருடன் மருத்துவக் குழுவினர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 8:17 PM IST

கோயம்புத்தூர் : ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையில் மதுபோதையில் கட்டிட தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஏர்கன் துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி செந்தில்குமார் (45) என்பவரது வலது தொடையில் குண்டு பாய்ந்தது.

பின்னர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களால் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில், ஏர்கன் குண்டு ரத்த நாளத்தை துளைத்து எலும்புக்கு அருகில், தொடையில் ஆழமாக தங்கியிருப்பது ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டது.

பின்னர் நோயாளியின் நிலையை அறிந்த மருத்துவக்குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதில், துப்பாக்கியால் சேதமடைந்த ரத்த நாளம் சரிசெய்யப்பட்டு, எலும்புக்கு அருகில் தொடையில் ஆழமாக தங்கியிருந்த துப்பாக்கிகுண்டை அகற்றினர். இதனால் நோயாளியின் உயிர் மற்றும் கால் வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டது. தற்போது செந்தில்குமார் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.

இதையும் படிங்க : ஆளுநர் கையெழுத்துடன் சான்றிதழா, துணைவேந்தர் நியமிக்காமல் பட்டமளிப்பு விழாவா? சென்னைப் பல்கலை பணியாளர்கள் போர்க்கொடி! - madras university Vice Chancellor

இது குறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், "நோயாளியின் காலின் முக்கிய ரத்த நாளத்தில் ஒட்டி இருந்ததால் துப்பாக்கி குண்டை அகற்றுவது மிகவும் சிரமமாக இருந்தது. மேலும், பிரதான ரத்த நாளத்தை துளைத்திருந்தால், மருத்துவமனையை அடைவதற்கு முன்பு நோயாளி அந்த இடத்திலேயே உயிரிழக்க அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் சரியான நேரத்தில் மருத்துவமனையை அடைந்ததால், நோயாளி காப்பாற்றப்பட்டார்.

இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மருத்துவக் கண்காணிப்பாளர் கண்ணதாசன் மற்றும் மருத்துவர்கள் வடிவேலு, தீபன்குமார், மயக்க மருந்து நிபுணர் கனகராஜன், சந்திரகலா ஆகியோர் வெற்றிகரமாக செய்தனர். அரசு மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான நிர்மலா இவர்களை நேரில் அழைத்து பாராட்டினார்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.