ETV Bharat / state

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! - Tamil Nadu assembly

cm grama salai project: முதல்வரின் கிராமசாலை திட்டத்தின் மூலம் கூடுதலாக மேலும் பத்தாயிரம் கிலோ மீட்டர் கிராம சாலைகள் 4000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் (credit - Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 12:13 PM IST

சென்னை: கிராம சாலைகள் மேம்பாடு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று 110 விதியின் கீழ் பேசியதாவது; ''ஊரக பகுதியில் உள்ள சாலைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட உள்ளேன். அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சியே திமுகவின் இலக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் சாலை மேம்பாட்டை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகள் உள்ளன. கிராம சாலைகள், கிராம மக்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக உள்ளது.

முதலீட்டுக்கும், ஊரக மக்களின் நலனுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கு ஊரக பகுதிகளில் வணிக பணிகளை அதிகப்படுத்துவது, அதன் மூலம் வேளாண் உற்பத்தியை அதிகரித்து ஊரக வளர்ச்சிக்கும் வழி வகுக்குற தரமான சாலைகள் கிராம மக்களின் வருமானத்தை உயர்த்துகிறது.

ஏற்கனவே, கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் தற்போது வரை 8 ஆயிரத்து 120 கிலோமீட்டர் நீளமுள்ள ஊரக சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் முதல்வரின் கிராமசாலை திட்டத்தின் மூலம் கூடுதலாக மேலும் பத்தாயிரம் கிலோ மீட்டர் கிராம சாலைகள் 4,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிங்க: என் மகன் எந்த தப்பும் பண்ணல"... கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கைதாகியுள்ள கண்ணுக்குட்டியின் தாய் குமுறல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.