ETV Bharat / state

“இனி எந்நாளும் தமிழ்நாட்டை திமுக தான் ஆள வேண்டும்”- முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை! - CM Stalin On Udhayanidhi Stalin - CM STALIN ON UDHAYANIDHI STALIN

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சருக்கு துணையாக இல்லை இந்த நாட்டு மக்களுக்கு துணையாக இருக்கப் போகிறார், முன்பைவிட கூடுதல் உழைப்பை அவர் செலுத்திட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 8:26 PM IST

சென்னை: தமிழகத்தின் புதிய துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும், அமைச்சரவையில் மாற்றமும் இன்று அதிகாரப்பூர்வ முறையில் நடந்த நிலையில், இவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாகவும், கட்சியின் புதிய அமைச்சரவையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், கட்சியின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தும் வகையிலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “எல்லார்க்கும் எல்லாம் என்ற இலக்குடன் நமது அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. சமூகநீதி சிந்தனையோடு, தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஜனநாயகப்படுத்தி விளிம்புநிலை மக்கள், ஏழை எளியவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை உருவாக்கி இருக்கிறோம்.

இம்மூன்றாண்டு கால வளர்ச்சிக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் அனைவரும் பங்களித்து இருக்கிறார்கள். இதன் இன்னொரு கட்டமாகவே தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சரான எனக்கு துணையாக அல்ல; இந்த நாட்டு மக்களுக்குத் துணையாக அவர் இருக்கப் போகிறார். தனக்கு வழங்கப்பட்ட விளையாட்டுத் துறையின் மூலமாக இந்தியாவின் கவனத்தை மட்டுமல்ல, உலகின் கவனத்தை ஈர்த்தவர் உதயநிதி. விளையாட்டுத் துறை, மிகக் குறுகிய காலத்தில் வீறுகொண்டு எழுந்துள்ளது.

நாள்தோறும் விளையாட்டு வீரர்கள் பெற்றுவரும் பரிசுகள், ஒலிம்பிக்கை நோக்கிய நம் மாநிலத்தின் பயணமாக அமைந்துள்ளது. அதேபோல், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்களை மிக உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறார். அதன் செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் கண்காணித்து, அதன் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றிக் காட்டி வருகிறார் அமைச்சர் உதயநிதி.

கட்சியின் இளைஞரணிச் செயலாளராக இருந்து இளைஞர்களை ஈர்த்தும், அவர்களை திராவிடக் கொள்கை கொண்டோராக கூர் தீட்டியும் வருகிறார். அவரது செயல்பாடுகள் கட்சியின் வளர்ச்சிக்கும், ஆட்சித் திறன் மூலமாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே, துணை முதலமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னிலும் கூடுதலான உழைப்பை அவர் செலுத்திட வேண்டும்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது தியாகத்தை நான் வாழ்த்தியதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து கட்சிக்கு எதிரான சதிச்செயல்களைச் செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம். தன்னால் இயக்கத்துக்கு களங்கம் வரக்கூடாது என்று நினைப்பவர்களால்தான் இந்த இயக்கம் இயங்குகிறது.

மேலும் மாணவப் பருவம் முதலே திராவிடக் கொள்கையில் ஊறி அடிமட்டத் தொண்டராகக் கட்சிக்காக உழைத்தவர்கள் அமைச்சர் சேலம் ராஜேந்திரன், ஆவடி நாசர், கோவி செழியன். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களது கடந்த கால உழைப்பையும், நிகழ்காலத் திறனையும் மனதில் வைத்து இப்பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன். தங்களுக்கு வழங்கப்பட்ட துறையை எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் கவனித்து மாநிலத்தை வளப்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க: “மற்றொரு கட்சியின் முடிவில் தலையிட முடியாது”.. துணை முதலமைச்சர் பற்றி திருமா கருத்து!

சில அமைச்சர்களுக்கு அவர்கள் வகிக்கும் துறையில் மாறுதல்கள் செய்து தரப்பட்டுள்ளன. புதிய துறையைக் கவனத்துடன் கையாள வேண்டும். அமைச்சர்கள் மீது நான் எந்தளவு நம்பிக்கை வைத்துள்ளேனோ, அதை விட அதிகமான நம்பிக்கையை நாட்டு மக்கள் வைத்துள்ளார்கள். நமக்கு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.

'திராவிட மாடல்' ஆட்சியானது இந்தியாவுக்கே முன்மாதிரி ஆட்சியாக அமைய வேண்டும். அறிவிக்கப்படும் ஒவ்வொரு திட்டமும், கடைக்கோடி மனிதரையும் சென்று சேர்கிறதா என்பதைக் உறுதி செய்ய வேண்டும். இனி எந்நாளும் தமிழ்நாட்டை திமுகதான் ஆளும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.