ETV Bharat / state

மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை.. வின்பாஸ்ட் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் ஸ்டாலின் பேச்சு! - வின்பாஸ்ட் அடிக்கல்

M.K.Stalin in Thoothukudi: தூத்துக்குடியில் 5 ஏக்கர் பரப்பளவில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தக வள மையம் மற்றும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மு க ஸ்டாலின்
மு க ஸ்டாலின்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 4:19 PM IST

Updated : Feb 25, 2024, 4:56 PM IST

மு க ஸ்டாலின்

தூத்துக்குடி: தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி விமான நிலையத்திகு வந்தார்.

விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி சிப்காட்டில், வின்பாஸ்ட் நிறுவனத்தின் கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியபின், அங்கிருந்து புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் பகுதியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வீடுகளை இழந்தவர்கள், சேதமடைந்தவர்கள், மீன்பிடி படகுகள் சேதமடைந்தவர்கள் என வெள்ளத் தொகுப்புகளை பார்வையிட்டு, மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர், ஸ்டாலின் பேசுகையில், “திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின், நலத்திட்ட உதவிகளை லட்சக்கணக்கில் வழங்கியுள்ளோம். 2024ஆம் ஆண்டு தொடங்கிய பின், முதல் நலத்திட்டத்தை தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இவர் தமிழகத்திற்கு மட்டும் குரல் கொடுப்பவர் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் குரல் கொடுப்பவர். பின், தூத்துக்குடி மாவட்ட பெண் சிங்கமாக விளங்கக்கூடிய கீதா ஜீவன் மழை வெள்ள பாதிப்பின்போது மக்களோடு மக்களாக இருந்து காப்பற்றினார். மேலும், பல்வேறு அமைச்சர்கள் களத்தில் இறங்கி வேலை பார்த்தனர். அப்போது அணைக்கட்டுகள், வாய்க்கால், குளங்கள் ஆகியவற்றில் உடைப்பு ஏற்பட்ட நிலையில், 66 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பில் போர்க்கால அடிப்படையில் பணி செய்யப்பட்டது.

கரோனா காலகட்டத்தில் ஒன்றிணைவோம் வா எனக் கூறி, மக்களுக்கு பல்வேறு பொருட்கள் அளித்தோம். குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கினோம். மக்கள் துயர் தீர்க்கத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் திராவிட மாடல் அரசு. தூத்துக்குடி, திருநெல்வேலியில் உள்ள பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் 58 நபர் வீதம் 5 லட்சம் ரூபாய், கோழி, ஆடு, மாடு உரிமையாளர்களுக்கு 34 கோடியே 74 லட்சமும், வீடு பாதிப்பு அடைந்தவருக்கு 6,000 வீதம் 382 கோடியே 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் சிறுவணிக கடன் திட்டம், கடனுதவி, மகளிர் சுய உதவிக் கடன், உப்பளத் தொழிலாளர்களுக்கு கடனுதவி வழங்கப்படும் என அறிவித்த நிலையில், அதன்படி தற்போது 1 லட்சத்து 76 ஆயிரத்து 450 பணிகள் வழங்கப்பட்டுள்ளது. பழுதான சாலைகள் சீரமைக்க 343 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டை சிறப்பு முகாம், சிறு, குறு தொழில் நிறுவன புதுப்பிக்கும் பணி, பேரிடர் காலத்தில் 6 விழுக்காடு சிறப்பு சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. இது ஸ்டாலின் உங்களுக்கு கொடுத்தது.

தூத்துக்குடியில் உள்ள விளாத்திக்குளம் பகுதியில் 7 கோடி ரூபாய் மதிப்பில் பனைபொருள் குறுங்குழுமம், கோவில்பட்டியில் கடலை மிட்டாய் குறுங்குழுமம் அமைய உள்ளது. மேலும், உற்பத்தி பொருள் கண்காட்சி கூடமும் அமைக்கப்படும். தூத்துக்குடியில் 5 ஏக்கர் பரப்பளவில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தக வள மையம் அமைக்கும் திட்டம் உள்ளது. மீனவ கிராமங்களில் தூண்டில் பாலம் அமைக்கப்படும். இது அனைத்தும் தமிழக அரசு நிதியில் இருந்து செய்யப்பட உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் 2,800 கோடி ரூபாய் மதிப்பில் டாட்டா பவர் தொழிற்சாலை அமைய இருக்கிறது. திருநெல்வேலி மேற்கு பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. தென்மாவட்ட மழை வெள்ளத்தின் போது மத்திய அரசிடம் நிதி கேட்டோம். ஆனால், கொஞ்சம் கூட தரவில்லை. உங்களிடம் சாதுரியம் இருந்தால் சாதித்து கொள்ளுங்கள் என மத்திய அமைச்சர் கூறுகிறார்.

சாதூரியம் இருந்ததால்தான் தமிழகம் தலை சிறந்த மாநிலமாக முன்னேறி உள்ளது. மக்கள் பணி ஆற்றுவதே திராவிட மாடல் ஆட்சி, உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவனாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருப்பேன்” என்றார்.

இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; கைது செய்த ஆசிரியர்களிடம் தரக்குறைவாகப் பேசியதாகக் காவலர் மீது குற்றச்சாட்டு!

Last Updated : Feb 25, 2024, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.