ETV Bharat / state

காற்று மாசுபாட்டை எதிர்கொள்ள திட்டங்கள் என்ன? முதலமைச்சர் ஸ்டாலின் கூறும் தகவல்! - CLIMATE CHANGE

காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நம்மை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கையில், ரூ.500 கோடி முதலீட்டில் 5 ஆயிரம் சிறிய நீர்ப்பாசன குளங்கள் அமைக்கப்பட உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (X / @mkstalin)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2024, 3:23 PM IST

சென்னை: காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியோடு, கடற்கரை மாவட்டங்களை புயல்களிலிருந்து பாதுகாத்தல், காலநிலை மாறுபாடுகளினால் ஏற்படும் வெள்ள அபாயங்களை தணித்தல், கடல்நீர் உட்புகுவதை தடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழுவின் இரண்டாவது கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று (டிச.05) வியாழைக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் முதலமைச்சர் கலந்துக்கொண்டு பேசியதாவது, “தமிழ்நாட்டின் காலநிலைத் திட்டத்தில் முக்கியத் தூணாக விளங்குவது, ஊரக நீர்ப் பாதுகாப்பு . 2024-2025-ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ரூ. 500 கோடி முதலீட்டில், 5 ஆயிரம் சிறிய நீர்ப்பாசன குளங்கள் அமைக்கப்பட உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்:

சென்னை கோப்புப்படம்
சென்னை கோப்புப்படம் (X / @mkstalin)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 701 இயற்கை வள மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட பரப்புரைகள் மூலம், 100 நாள் நீர் சேகரிப்பு இயக்கமானது, 1.3 லட்சம் நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்வதற்கு, 12 மாநகராட்சிகள் மற்றும் 9 நகராட்சிகளில் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 477 நகர்ப்புற நீர் நிலைகளை மறுசீரமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் நகர்ப்புறங்களின் நிலைத்தன்மையை வலுப்படுத்தியிருக்கிறது.

ஆசிய வளர்ச்சி வங்கி (ADB):

பறவைகள் கோப்புப்படம்
பறவைகள் கோப்புப்படம் (X / @mkstalin)

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியோடு, காவிரி கழிமுக பகுதியில், பருவநிலை மாறுதல் தழுவல் திட்டம், கடற்கரை மாவட்டங்களை புயல்களிலிருந்து பாதுகாத்தல், காலநிலை மாறுபாடுகளினால் ஏற்படும் வெள்ள அபாயங்களை தணித்தல், பாசன வசதியை மேம்படுத்துதல், கடல்நீர் உட்புகுவதை தடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் முதல் பகுதியாக, அடப்பாறு, ஹரிச்சந்திரா நதி, வெள்ளையாறு, பாண்டவையாறு, வளவனாறு, வேதாராண்ய கால்வாய் ஆகிய 6 ஆறுகள் மற்றும் 13 நீரேற்று நிலையங்களின் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "காலநிலை மாற்றம் மனிதர்கள் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்" - முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்!

வெண்ணாறு, பாமினியாறு, கோரையாறு, மனங்கொண்டனாறு, மரக்கா கோரையாறு, கடுவையாறு ஆகிய 6 ஆறுகள் மற்றும் 6 நீரேற்று நிலையங்களை மேம்படுத்துவதற்காக, முதல்நிலை திட்ட அறிக்கை ஆயிரத்து 825 கோடி ரூபாய் மதிப்பில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இந்திய அரசின் பொருளாதார விவகாரத் துறைக்கு கடனுதவி வேண்டி சமர்ப்பிக்கப்பட்டு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் முயற்சியால், ராம்சர் (Ramsar Convention) தளங்களின் எண்ணிக்கை ஒன்றிலிருந்து 18-ஆக அதிகரித்துள்ளது.

மீண்டும் மஞ்சப்பை:

மஞ்சப்பை கோப்புப்படம்
மஞ்சப்பை கோப்புப்படம் (X / @mkstalin)

“மீண்டும் மஞ்சப்பை” போன்ற பிரச்சார நடவடிக்கைகளில் மூலமாக துணிப்பைகளின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் (plastic) பொருட்களின் பயன்பாட்டை கணிசமாக குறைந்துள்ளது. முன்பு இருந்ததைவிட இப்போது சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே அதிகமாகி இருக்கிறது.

வெப்ப அலை:

வெப்ப உயர்வு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா. காலநிலை மாற்றத்திற்கான குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான நீர்ச்சத்து மிகுந்த பொருட்களை வழங்குவதற்கும், தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: ஐஐஎம் போட்டியில் சாதித்த பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்; இவர்களின் பிசினஸ் மாடல் என்ன?

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயிலால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூகநல மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள் ஆகியவற்றில் வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில், 5-ஆவது பெருநகரமாக சென்னை இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் விரைவான நகரமயமாக்கலுக்கு ஏற்ப, காலநிலைக்கான செயல்திட்டத்தை தயாரிக்கும் C40 நகரங்களுக்கான கூட்டமைப்பில் சென்னை மாநகராட்சி இணைந்துள்ளது.

காற்று மாசுபாடு:

மின் நிலையம் கோப்புப்படம்
மின் நிலையம் கோப்புப்படம் (X / @mkstalin)

காற்று மாசுபாடு சமீபகாலமாக ஒரு தீவிரமான சுகாதார சவாலாக மாறியிருக்கிறது என்று ஐ.நா.தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில், பொருளாதார மேம்பாட்டையும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் இரு கண்களாக நினைத்து தொடர்ந்து செயலாற்றி வருகிறோம்.

தமிழ்நாட்டை உலக அரங்கில் காலநிலை மீள்திறன் மற்றும் நீடித்த நிலைத்த வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் முன்னோடியாக மாற்றிக் காட்டுவோம். இந்த பூமியில் வாழப்போகின்ற குழந்தைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான இயற்கைக்கு கேடுகள் விளைவிக்காத உலகத்தை வழங்க நம்முடைய வாழ்நாளில் திட்டங்களை முன்னெடுப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.