ETV Bharat / state

"200 தொகுதிகளில் வெல்ல வேண்டும்" - 2026 க்கு டார்கெட் ஃபிக்ஸ் செய்த ஸ்டாலின். - CM STALIN ON 2026 ELECTION

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தொகுதிவாரியாக பார்வையாளர்களை நியமித்து திமுக தேர்தல் பணியை தொடங்கியிருக்கும் நிலையில் இவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2024, 5:59 PM IST

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபேற்றது. அதில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

பார்வையாளர்களின் வேலை என்ன?: 234 தொகுதி பார்வையாளர்களும் அரசின் திட்டம் அந்த தொகுதியில் எப்படி சென்றுள்ளது. அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மக்கள் ஆதரவு பெற்ற தகுந்த வேட்பாளர்கள் யார் என்பதையும் திமுக தலைமையிடம் அறிவிப்பார்கள்.

திட்டங்கள் மூலம் வாக்கு: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மாணவ - மாணவியருக்கான மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களின் பலன்களை பெண்கள், இளைஞர்களிடம் எடுத்துக் கூறுவது. சிறுபான்மையினர், தலித் வாக்குகளை தக்க வைப்பதை உறுதி செய்வது, போன்ற நடவடிக்கைகள் மூலம் 2026ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என திமுக மும்முரம் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

திமுகவின் இலக்கு 200 தொகுதிகள்: இந்நிலையில் தான் தொகுதி பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றுகையில், “சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அந்த தேர்தலிலும் நூற்றுக்கு நூறு வெற்றியை பெறவேண்டும். நம்முடைய இலக்கு 200 தொகுதிகள். அதற்கான உழைப்பை, நீங்கள் இன்றிலிருந்தே தொடங்க வேண்டும்.

வெற்றியை உறுதிசெய்ய வேண்டும்: அதற்காகத்தான் இப்போதே 234 தொகுதிகளுக்கும் தொகுதிப் பார்வையாளர்களை நியமித்துள்ளோம். புதிதாக பொறுப்பேற்றுள்ள அனைத்துத் தொகுதிப் பார்வையாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். நாம் வெற்றி பெறுவதை உறுதிசெய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு. நீங்கள் அனைவரும் இணைந்து ஆலோசனைப்படி பணிகளைத் தொடங்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் எந்தப் புகாரும் வரக்கூடாது: உங்களுடைய பணிகளில் ஏதாவது உதவி தேவைப்பட்டாலோ, இல்லை எதாவது சந்தேகம் இருந்தாலோ தலைமைக் கழகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் யார் மேலும் தனிப்பட்ட முறையில் எந்தப் புகாரும் சொல்ல முடியாத அளவிற்குப் பணியாற்றுங்கள்.

இதையும் படிங்க:"ஆட்சி,அதிகாரத்தில் பங்கு" - 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போட்ட விஜய்!

சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்திருக்கிறது: இந்தியாவில் எந்த ஆட்சியும் செய்யாத மகத்தான சாதனைகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான், இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்திருக்கிறது என்று என்னால் நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியும். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியால் பயனடைந்த மக்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களே நமக்கு மிகப்பெரிய பரப்புரையாளர்கள்” என்றார்.

விஜய் மாநாடு தொடர்பான கேள்வியை புறக்கணித்த கனிமொழி: இதையடுத்து இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கூறுகையில், “2026 தேர்தல் களத்தில் யார் யாருக்கு என்ன பொறுப்பு என்பது குறித்து திமுக தலைவர் மிகத் தெளிவாக தெரிவித்திருக்கிறார். களத்தில் இருக்கக்கூடிய பிரச்னைகள் களைய எப்படி செயல்பட வேண்டும் எப்படி செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்ற ஆலோசனைகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார்” என்றார். மேலும் விஜய் மாநாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்.

டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதன் பின்னர் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், “சமூகத்தின் அனைத்து பிரச்னைகளும் அரசாங்கத்தின் பார்வைக்கு வருவதில்லை. அரசாங்கத்தின் பார்வைக்கு வருகிற பிரச்னைகளை நாங்கள் தீர்த்து வைக்கிறோம்.

சில கிராமங்களில் மக்களுக்கு யாரிடம் போய் சொல்வது என்று தெரியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களை சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்து நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த கூட்டத்தின் நோக்கம். இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து எதுவும் பேசப்படவில்லை. இந்த தொகுதிகளில் திமுக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தான் பேசினோம்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.