சென்னை: இம்மாதம் 26ஆம் தேதி கொண்டாடப்படும் 'ஜீரோ ஆக்சிடெண்ட் டே' தினத்தை முன்னிட்டு சென்னை பல்லவன் இல்லத்தில் அதற்கான இலச்சினையை சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் வெளியிட்டார். விபத்தில்லா சென்னையை உருவாக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று முதல் வருகின்ற 26ஆம் தேதி வரை "ஜீரோ ஆக்சிடெண்ட் டே" என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இந்த தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) போக்குவரத்து காவல்துறை சார்பில், சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு சிறு விபத்தும் ஏற்படுத்தாமல், வாகனத்தை இயக்கியதற்காக மாநகரப் போக்குவரத்து கழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து ஓட்டுனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பின்னர், விபத்தில்லாமல் இயக்குவோம் என மாநகர போக்குவரத்து ஓட்டுநர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
இதனிடையே, நிகழ்ச்சி மேடையில் பேசிய சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர், "சென்னையில் விபத்து இல்லை என்ற சூழல் ஏற்படுமானால் அதுதான் ஜீரோ ஆக்ஸிடென்ட் டே. இதில் வெற்றி பெறலாம் வெற்றி பெறாமலும் இருக்கலாம். இது ஒரு முயற்சி, இந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்றால் சென்னையில் இருக்கக்கூடிய அனைத்து வாகன ஓட்டிங்களும் ஒத்துழைக்க வேண்டும்.
பெரிய வாகனம் என்று பார்த்தால் எம்டிசி (மாநகர போக்குவரத்து) வாகனங்கள் தான். அதனால் தான் இந்த விழிப்புணர்வை இங்கிருந்து ஆரம்பித்திருக்கிறோம். ஜீரோ விபத்து என்றால் விபத்தை மட்டும் பூஜ்ஜியத்தை ச்சியம் ஆக்குவததோடு மட்டும் இல்லாமல் ஜீரோ அபராதம், ஜீரோ சலான், ஜீரோ விதி மீறல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
இவ்வாறு விபத்து, விதிமீறல், அபராதம் என அனைத்தையும் ஜீரோ என்ற நிலைக்கு கொண்டு வரும்போது, லஞ்சமும் ஜீரோ ஆகும். மேலும், பள்ளிகள், ஐடி கம்பெனிகள், லாரி ஓட்டுநர்கள், மருத்துவ மனைகள் என அனைத்து இடங்களிலும் 20 நாள் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்" எனக் கூறினார்.
செய்தியாளர்களைச் சந்திப்பில் பேசியது: அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சந்தித்த சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர், "விபத்தில்லா சென்னையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இன்று முதல் 20 நாட்களுக்கு தொடர் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வின் முதலாவது நாளான இன்று, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர் ஊழியர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வு நடைபெற்று உள்ளது. நாளை பள்ளிகளிலும், நாளை மறுநாள் முதல் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு, ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிடவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்த உள்ளோம்.
சென்னையில் உள்ள ஒவ்வொருவரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்று என் மூலம் விபத்து ஏற்படாது, போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் வாகனம் ஓட்டுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். விபத்தில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஹெல்மெட் கம்ப்ளைன்ட் நாள் , சிக்னல் கம்பளைண்ட் நாள் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் ஒரு மாதத்திற்கு 40 முதல் 50 பேர் போக்குவரத்து விபத்துக்கு உள்ளாகின்றனர். ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு விபத்துக்கள் சென்னையில் நடைபெறுகிறது.
போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை உயர்த்தியுள்ளதன் காரணமாக சென்னையில் 90 சதவீதம் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். சென்னையில் சாலைகளில் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க புதிய திட்டம் கொண்டுவரப்படும்.
அடுத்த வருடம் இறுதியில் 165 சாலை இணைப்புகளில் அதிநவீன சிசிடிவி கேமரா (போக்குவரத்து விதிமீறல் அபராதம் விதிக்கும்) பொருத்தப்படும். தற்போது 34 சாலை இணைப்புகளில் அத்தகைய நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளன" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கல்வி மட்டுமே மனித குலத்துக்கு நாம் அளிக்கக்கூடிய அழியாத செல்வம்; சென்னை ஐஐடி இயக்குநர் பெருமிதம்!