ETV Bharat / state

அயோத்தி செல்ல பயணிகள் இல்லாததால் விமான சேவை ரத்து.. அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது! - Andaman flight cancelled - ANDAMAN FLIGHT CANCELLED

Chennai Airport: சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக, சென்னையிலிருந்து அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. இதனால் விமானத்தில் பயணம் செய்ய இருந்த 138 பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

chennai airport file image
chennai airport file image (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 6:28 PM IST

சென்னை: அந்தமானில் சூறைக்காற்று மழை பெய்யும் மோசமான வானிலை நிலவுவதால், சென்னையில் இருந்து 138 பயணிகளுடன் அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கு திரும்பிய நிலையில், விமானம் மீண்டும் நாளை காலை அந்தமான் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று (சனிக்கிழமை) காலை 5.30 மணிக்கு 138 பயணிகளுடன் அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் காலை 7.30 மணியளவில் அந்தமான் வான் வெளியை நெருங்கியுள்ளது. அப்போது அங்கு அதிகமான சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவியுள்ளது.

இதனால் ஏர் இந்தியா விமானம், அந்தமானில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து கொண்டிருந்துள்ளது. மேலும், அந்தமானில் வானிலை சீரடையாததால், விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை அந்தமானில் தரையிறக்காமல் மீண்டும் சென்னைக்கு திருப்புமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, விமானம் இன்று காலை 11.15 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தடைந்தது.

இதனையடுத்து, விமானம் இன்று ரத்து செய்யப்படுவதாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை விமானம் மீண்டும் அந்தமான் புறப்பட்டுச் செல்லும். மேலும், பயணிகள் இன்று வாங்கிய பயண டிக்கெட்டில் அந்தமான் பயணம் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பயணிகள் நாங்கள் வெளியூரிலிருந்து வந்திருக்கிறோம். எனவே, எங்களுக்கு தங்குவதற்கு இட வசதி ஏற்பாடுகள் செய்து கொடுங்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால், பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, அந்தமானில் இருந்து சென்னை வருவதற்கு 164 பயணிகள் அந்தமான் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால், விமானம் அந்தமானில் தரையிறங்காமல் சென்னைக்கு திரும்பி வந்ததால், 164 பயணிகளும் அந்தமான் விமான நிலையத்தில் கடும் அவதிக்குள்ளாயுள்ளனர்.

இந்நிலையில், சென்னை - அயோத்தி மற்றும் அயோத்தி - சென்னை ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் ஸ்பைஜெட் தனியார் பயணிகள் விமானங்கள் இன்று போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு தினமும் காலை 8.35 மணிக்கு தனியார் ஸ்பைஜெட் விமானம் புறப்பட்டுச் செல்லும். இந்த விமானம் காலை 11.15 மணிக்கு அயோத்தியைச் சென்றடையும். அதன் பின்னர், அதே ஸ்பைஜெட் பயணிகள் விமானம், அயோத்தியில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தடையும்.

இந்நிலையில், இன்று சென்னையில் இருந்து அயோத்தி செல்லும் மற்றும் அயோத்தியில் இருந்து சென்னைக்கு வரும் விமானம் ஆகிய 2 விமானங்கள், போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், விமானத்தில் பயணம் செய்ய ஒரு சில பயணிகள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதால், அவர்கள் பயண டிக்கெட்டுகள, அவர்கள் விரும்புகின்ற தேதிக்கு மாற்றிக் கொடுக்கப்படும். இல்லையென்றால், பயணிகளுக்கு பயணக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை.. 31 விமானங்களின் சேவைகள் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.