ETV Bharat / state

தெற்கு ரயில்வே இன்ஜினியரை 48 மணி நேரம் சைபர் அரெஸ்ட்டில் வைத்த போன் கால்..சென்னையில் விசித்திர வழக்கு! - FAKE POLICE CALL SCAM CHENNAI

chennai fake police call scam case: மும்பை போலீஸ் எனக்கூறி தெற்கு ரயில்வே சீனியர் டிவிஷனல் இன்ஜினியரை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனாம்பேட்டை காவல் நிலையம்
தேனாம்பேட்டை காவல் நிலையம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 7:20 PM IST

சென்னை: தெற்கு ரயில்வேயில் சீனியர் டிவிஷனல் இன்ஜினியராக பணிபுரிந்து வருபவர் ராம் பிரசாத். இவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ராம் பிரசாத்திற்கு மர்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மூன்று வங்கிகளில் 38 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ராம் பிரசாத்திற்கு பிடிவாரண்டு இருப்பதாக கூறி, சென்னை பெரிய மேட்டில் உள்ள லாட்ஜில் வந்து தனியாக அறை எடுத்து தங்குமாறு மிரட்டியுள்ளார்.

மிரட்டலுக்கு பயந்து சென்னை பெரிய மேட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த இரண்டு நாட்களாக ராம் பிரசாத் தங்கியுள்ளார். அப்போது, வீடியோ கால் மூலம் பேசிய அந்த மர்ம நபர், 38 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் பிடிவாரண்டு இருப்பதாகவும், அதற்கு 5 கோடி ரூபாய் கொடுத்தால் இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறியுள்ளார். மேலும், வேறு யாருடனும் தொடர்பில் இருக்கக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்.

இதுபோல கடந்த இரண்டு நாட்களாக இவர்களுக்குள் வீடியோ கால் உரையாடல் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து மிரட்டலுக்கு ஆளான ராம் பிரசாத் என்ன செய்வதென்றே தெரியாமல் அறைக்குள்ளேயே முடங்கியுள்ளார். கடந்த இரண்டு தினங்களாக தனது கணவர் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு இடங்களில் தேடி வந்த அவரது மனைவி, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவரது செல்ஃபோன் சிக்னல்களை வைத்து, அவர் பெரியமேட்டில் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் தனி படையுடன் சென்று, பெரியமேட்டில் உள்ள தங்கும் விடுதியில் அவரை மீட்டு வந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், மும்பை போலீஸ் எனக் கூறி மர்ம நபர் தன்னை 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மோசடி கும்பல் குறித்து தேனாம்பேட்டை காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊட்டி மருமகள் மரணம்; சித்திரவதை கொலை அம்பலம்.. கணவன், கொழுந்தன் உட்பட 4 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.