ETV Bharat / state

பணிப்பெண் விவகாரம்; பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் - மருமகள் நேரில் ஆஜராக உத்தரவு! - Housemaid Harassment case - HOUSEMAID HARASSMENT CASE

Housemaid Harassment case: வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவிற்காக பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 3:50 PM IST

சென்னை: பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன், மனைவி மார்லினா ஆன்வுடன், சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் தன்னை துன்புறுத்தியதாக, அவரின் வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் அளித்த புகாரின்படி, வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும், கடந்த ஜனவரி 25-ல் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். சிறையில் இருந்த இவர்கள் இருவரும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரின் மனைவி மார்லினா ஆன்டோ ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கின் கோப்புகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவிற்காக இருவரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: Budget 2024: அணு உலைகள் உற்பத்தி; அண்டை நாடுகளுக்கு 'ஷாக்' கொடுக்கும் அறிவிப்பு! - budget 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.