ETV Bharat / state

ஜாபர் சாதிக் வழக்கு; 3 நாட்கள் காவலில் எடுத்த விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! - JAFFER SADIQ CASE - JAFFER SADIQ CASE

JAFFER SADIQ: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை மூன்று நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 9:50 PM IST

சென்னை: வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரால் கடந்த மார்ச் மாதம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளருர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 26ஆம் தேதி திகார் சிறையில் கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி அமலாக்கத்துறை தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜாபர் சாதிக் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணை அதிகாரி சுனில் சங்கர் யாதவ் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது, “ஜாபர் சாதிக் மீது போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக சென்னை மற்றும் மும்பையில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்டுள்ளதாகவும், இந்த கடத்தல் மூலமாக கிடைத்த சட்ட விரோத பணத்தால் பயனைடைந்த பிரதான பயனாளி என்பதற்கான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் உள்ளதாக தெரிவித்தார். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பதால் பிடிவாரண்ட் மூலமாக ஆஜர்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமானது” என தெரிவித்தார்.

அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, ”ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பது மிகவும் முக்கியமானது என்பதால், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

ஜாபர் சாதிக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ஆஜராகி, “சென்னை மற்றும் மும்பையில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு ஜாபர் சாதிக் ஆஜராகி விளக்கம் அளித்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத்துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கைது செய்த 15 நாட்களுக்கு தான் காவலில் எடுக்க முடியும் என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் நீங்கள் அமலாக்கத்துறையின் காவலில் செல்ல விரும்புகிறீர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தனக்கு விருப்பம் இல்லை என்றும், ஏற்கனவே அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்த நிலையில் மீண்டும் காவல் கேட்கிறார்கள் என பதிலளித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாபர் சாதிக்கை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஜூலை 18ஆம் தேதி உறவினரைச் சந்திக்க உத்தரவிட்டு, மீண்டும் 19ஆம் தேதி மாலை நேரில் ஆஜர்படுத்த நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஏர்வாடியில் இசையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி! - Ervadi Muharram festival

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.