சென்னை: பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன், மனைவி மார்லினா ஆன்வுடன், சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் தன்னை துன்புறுத்தியதாக, அவரின் வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் அளித்த புகாரின்படி, வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளில் திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும், கடந்த ஜனவரி 25ல் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். சிறையில் இருந்த இவர்கள் இருவரும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரின் மனைவி மார்லினா ஆன்டோ ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கின் கோப்புகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை முதன்மை அமர் நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது. இதையடுத்து, வழக்கின் விசாரணைக்காக ஜூலை 22ஆம் தேதிக்கு நீதிபதி எஸ்.அல்லி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: FMGE தேர்வுக்கு தடை கோரி வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!