ETV Bharat / state

சென்னையில் 55 ஸ்பாக்களுக்கு சீல்.. காவல் துறை அதிரடி! - Chennai Spa Sealed

Chennai police sealed 55 spa: சென்னையில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு சீல் வைத்த காவல்துறையினர், மசாஜ் மற்றும் பாலியல் தொழில்கள் நடைபெறுவதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Chennai Police Logo Photo
Chennai Police Logo Photo (Credit to Greater Chennai X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 9:20 PM IST

சென்னை: சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில், குறிப்பாக சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களை கடந்த ஒரு மாதத்தில் கண்டறிந்து, காவல்துறையினர் சீல் வைத்து மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான உரிமங்கள் பெறாமல் ஸ்பாக்கள் நடத்தி வருவதாகவும், அதில் மசாஜ் மற்றும் பாலியல் தொழில் நடத்தி வருவதாகவும், தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் நிலையத்தில் உரிய ஆவணம் பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 55 ஸ்பாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூடி சீல் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காட்டிக்கொடுத்த குரல்வளை? - உடற்கூறாய்வு அறிக்கையால் சூடாகும் ஜெயக்குமார் வழக்கு! - Tirunelveli Jayakumar Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.