ETV Bharat / state

இனி தப்பாது.. திருட்டு பைக்குகளை காட்டிக்கொடுக்கும் கேமராக்கள்... சென்னை போலீஸ் அசத்தல்! - tracing cameras in chennai

new camera technology in chennai: சென்னையில் திருடுபோகும் இருசக்கர வாகனங்களை கண்டுபிடிக்க நகரும் நவீன கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

நவீன கேமரா
நவீன கேமரா (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 7:44 PM IST

சென்னை: சென்னை மாநகரில் கடந்த நான்கு வருடங்களில் மட்டும் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களில் 3,200 வாகனங்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. மேலும், சென்னையில் திருடப்படும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் வழிப்பறி, செல்ஃபோன் பறிப்பு, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் குற்றவாளிகள் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருடப்படும் இருசக்கர வாகனங்களை விரைவாக கண்டுபிடிக்கவும், இனிமேல் இருசக்கர வாகன திருட்டு நடக்காமல் தடுக்கவும் ஐ.வி.எம்.எஸ் என்ற புதிய கண்காணிப்பு கேமரா தொழில்நுட்பத்தை 1.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டு சென்னையில் சில இடங்களில் காவல்துறையினர் அமைத்துள்ளனர்.

முதல்கட்டமாக சென்னை மாநகரில் 28 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 100 கேமராக்களை இணைத்து கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டுள்ளனர். மேலும், 80 இடங்களில் நிலையான கேமராக்களை பொருத்தியும் 50 இடங்களில் வாகனங்களில் நகரும் நவீன கேமராக்களை பொருத்தியும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இதையடுத்து, திருடு போன 3,200 வாகனங்களின் எண்கள் அனைத்தும் ஐ.வி.எம்.எஸ் டேட்டாபேஸில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. திருடப்பட்ட வாகனங்கள் இந்த கேமராவை கடக்கும்போது, அதுகுறித்து அந்த பகுதியில் உள்ள உயர் காவல் துறை அதிகாரிகளுக்கு புகைப்படத்துடன்கூடிய குறுந்தகவல் செல்லும். அதன் அடிப்படையில் உடனடியாக வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரை எளிதாக அடையாளம் காணப்பட்டு கண்டுபிடித்து விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை பரங்கிமலையில் திருடப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்றை பாரிமுனையில் வைக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப கேமரா மூலம் கண்டறிந்து போலீசார் மீட்டுள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலமாக விரைவாக திருடப்பட்ட வாகனங்களை கண்டுபிடித்துவிடலாம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிபிஐ அதிகாரி போல் பேசி அரசு மருத்துவரிடம் ரூ.36 லட்சம் மோசடி.. சேலத்தில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.