ETV Bharat / state

கனமழை எச்சரிக்கை; காய்கறி, மளிகைக் கடைகளில் குவிந்த சென்னைவாசிகள்! - NORTHEAST MONSOON

தமிழகத்தில் பருவமழை நாளை தொடங்க உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் மக்கள் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க காத்திருக்கும் மக்கள்
அத்தியாவசியப் பொருட்களை வாங்க காத்திருக்கும் மக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2024, 11:06 PM IST

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ள நிலையில், 16ம் தேதி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும், ஒரு சில இடங்களில் அதி கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அருகில் இருக்கும் காய்கறி கடைகள், மளிகை கடைகளில் மக்கள் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஏற்கனவே, தமிழக அரசு அத்தியாவசியப் பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இருக்காது என அறிவித்திருந்த நிலையில், மக்கள் மழை வெள்ளத்தின் மீது இருக்கும் அச்சத்தினால் இயல்பாக வாங்கும் பொருட்களை விட அதிகமாக வாங்கி செல்கின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க வந்த மக்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதுகுறித்து சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள பல்பொருள் அங்காடியில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்ற வாடிக்கையாளர்கள் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளனர். முதலில் பேசிய ராதாகிருஷ்ணன், "நாளைக்கு மழை பெய்யும் என்பதால் நாங்கள் தற்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்ல வந்தோம். ஆனால், காய்கறிகள் மற்றும் பழங்கள் சீக்கிரமாகவே விற்றுவிட்டன. ஒரு சில பொருட்கள் மட்டுமே உள்ளன.

இதையும் படிங்க : வடகிழக்கு பருவமழை: பள்ளி, கல்லூரி விடுமுறை முதல் 4 பேர் பலி வரை.. தமிழ்நாடு மழை பாதிப்புகள் ரவுண்ட் அப்!

நாளைக்கு மழை பெய்யும் என்பதால் மக்கள் அனைவரும் வேகமாகவே வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். நாங்கள் எதிர்பார்த்து வந்த காய்கறிகள் இங்கே இல்லை. குறிப்பாக, முட்டைகோஸ், கேரட், காலிஃப்ளவர், தக்காளி ஆகியவை இல்லை. இதனால் நாங்கள் வேறு கடைகளுக்கு சென்று வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.

அதன்பின் பேசிய எம்.எஸ்.ராவ், "காய்கறிகள் அனைத்தும் காலி ஆகி விட்டன ஒன்றுமே இல்லை. ஏதோ இருப்பதை மட்டும் தற்போது வாங்கியுள்ளேன். உருளைக்கிழங்கு, பீர்க்கங்காய், வெண்டைக்காய், கோவக்காய், பீன்ஸ், கத்தரிக்காய் என அனைத்தும் தீர்ந்து விட்டன. வேறு கடைகளுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால் அங்கே கிடைக்குமா என்பது தெரியவில்லை" என்றார்.

அடுத்ததாக பேசிய அபர்ணா, "நான் தற்போது காய்கறிகள் வாங்க வந்தேன். ஆனால் இங்கு எந்த காய்கறிகளும் இல்லை. நாங்கள் எப்போதும் தொடர்ச்சியாக வாங்குகின்ற எந்த பொருட்களும் இல்லை. வெறும் கத்தரிக்காய் குழந்தைகளுக்கு தேவையான நொறுக்குத் தீனி பொருட்கள் வாங்கி உள்ளேன்.

ஒரு சில அத்தியாவசியப் பொருட்கள் நான் ஏற்கனவே வீட்டில் வாங்கி வைத்துள்ளேன். ஆனால் பொறுமையாக வைத்து சாப்பிடுமாறு இருக்கும் பிரட், ஜாம் போன்றவை எதுமே இல்லை. ரெடிமேட் பரோட்டா, சப்பாத்தி சில உள்ளன. ஆனால் அதை நாங்கள் பயன்படுத்த மாட்டோம்" என்றார்.

பால் தட்டுப்பாடு: பருவமழை தீவிரமடையும் என்பதால் பொது மக்கள் அதிக அளவில் பாலை வாங்கிச் சென்றதால் சென்னை முழுவதும் பால் தட்டுப்பாடு துவங்கியது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.