ETV Bharat / state

அடுத்த 7 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! - TN weather forecast - TN WEATHER FORECAST

TN weather forecast: அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மழை தொடர்பான கோப்புப்படம்
மழை தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 7:42 PM IST

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில், தென்தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், ஒருசில கடலோர மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிளும் லேசான மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 12செ.மீ மழையும், மதுரை தல்லாகுளம் பகுதியில் 11செ.மீ மழையும், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பகுதியில் 10 செ.மீ மழையும் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், குறைந்த பட்சமாக தர்மபுரி மாவட்டம் அரூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், மற்றும் சேலம் மாவட்டம் ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, நீலகிரி மாவட்டம் கின்னக்கோரை மற்றும் ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலையாக திருத்தணியில் 36.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் 33 முதல் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் கடலோரப்பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 30 முதல் 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும், மலைப் பகுதிகளில் 19 முதல் 25 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 35.7 டிகிரி செல்சியஸ் வெப்பமும், நுங்கம்பாக்கத்தில் 35.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 22ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 24ஆம் தேதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

மழைக்கான எச்சரிக்கை: தமிழகத்தில் மே 20ஆம் தேதி, அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரையிலான பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, இராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிசில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மே 21ஆம் தேதி, தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அந்தவகையில் தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பின்னர், மே 22ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிள் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரி சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், மே 23ஆம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிசில இடங்களில் கனமழையும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மே 24ஆம் தேதியை பொறுத்தவரை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும், அதேபோல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதனைத் தொடர்ந்து, மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிசில் இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெப்பநிலை குறித்த எச்சரிக்கை: இன்று முதல் 24ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாக அல்லது இயல்பான வெப்பநிலையை ஒட்டியும் இருக்க வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் வானிலை நிலவரம்: சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று (திங்கட்கிழமை) குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா உள்ளிட்ட தமிழக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும், இலங்கையின் தெற்கு பகுதியை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல், நாளையும் (மே.21) தமிழக கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

குறிப்பாக, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரள மாநில கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

பின்னர் மே.22ஆம் தேதி, தமிழக கடலோரப்பகுதிகள், வடக்கு கேரள மற்றும் கர்நாடக உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அதேசமயம், குமரிக்கடல், மன்னார் வளைகுடா உள்ளிட்ட கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

அதனைத் தொடர்ந்து மே.23ஆம் தேதியில், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு உள்ளிட்ட கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி? - வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.