ETV Bharat / state

டெல்டாவில் மழை; நீலகிரியில் உறை பனிக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?

TN weather report: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று, தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

நீலகிரியில் உறை பணி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 4:01 PM IST

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜன.30) தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெர்வித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை (ஜன.31) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும், பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும், நாளை (ஜன.31) நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம்: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முத்க் 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் கணிசமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது. மேலும், கரூர், ராமநாதபுரம், நீலகிரி, மாவட்டங்களில், இயல்பான நிலையிலிருந்து அதிகமாக வெப்ப அளவு பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 2024 பட்ஜெட்: அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.