ETV Bharat / state

தமிழ்நாட்டில் மழை வாய்ப்பு எப்படி? - சென்னை வானிலை ஆய்வு மையம் அப்டேட்! - TAMILNADU WEATHER UPDATE - TAMILNADU WEATHER UPDATE

TAMILNADU WEATHER UPDATE: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை - கோப்புப்படம்
மழை -கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 4:05 PM IST

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 6; தேவாலா (நீலகிரி) 4; வால்பாறை PTO (கோயம்புத்தூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 3; உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), செருமுள்ளி (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி), பெரியாறு (தேனி), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 2.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்): அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையம் 39.4 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோடு19.0 டிகிரி செல்சியஸ்.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

செப்.11 மற்றும் செப்.12: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

செப்.13 முதல் செப்.17: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளான மன்னார் வளைகுடா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் செப்.11 மற்றும் செப்.12 தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளான தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்.11 மற்றும் செப்.12 தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளான தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் செப்.11 மற்றும் செப்.12 தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய அரபிக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதையும் படிங்க: தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.