ETV Bharat / state

பாஜகவின் சுதந்திர தினப் பேரணி:அனுமதி மறுத்த காவல் துறை;பச்சைக்கொடி காட்டிய உயர் நீதிமன்றம்! - independence day bjp rally - INDEPENDENCE DAY BJP RALLY

சுதந்திர தினத்தன்று மாவட்ட தலைநகரங்களில் தேசியகொடியுடன் இருசக்கர வாகன பேரணி செல்ல, பாஜகவுக்கு அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credit - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 12:26 PM IST

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடியுடன் இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்த அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி அளித்த மனுவை காவல் துறை நிராகரித்ததை எதிர்த்து பாஜக கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ண பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என அரசின் விளக்கத்தை தெரிவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 14) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'அரசியல் காரணங்களுக்காக மட்டுமே பேரணி நடத்தப்படுகிறது. பொதுநல நோக்கம் இல்லை. மேலும் தேசிய கொடி விதிகளின்படி கொடியை அவமதிக்கக் கூடாது.

கடந்த 2023 மத்திய உள்துறை அமைச்சகம் கொடியை கையாள்வது குறித்து வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், நீதிபதிகள் தவிர மற்றவர்களின் வாகனங்களில் தேசிய கொடியை பயன்படுத்தக்கூடாது.

பொதுமக்கள் வீடுகளில் கொடியை ஏற்றுவதற்கு தடைவிதிக்க முடியாது. பெரும்பாலான காவலர்கள் சுதந்திர தின நிகழ்ச்சியில் இருப்பதால் பாதுகாப்பு வழங்க முடியாது. சட்டம் -ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது' என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

'இளைஞர்களிடையே சுதந்திர தினம் குறித்த விழிப்புணர்வுக்காக பேரணி நடத்தப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அரசுக்கு எதிராக எந்த கோஷமும் எழுப்பப்படாது' என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'நடந்து செல்பவர்கள் கொடியை எடுத்து செல்ல தடை? சைக்கிளில் எடுத்து செல்ல தடை? இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்ல தடை? தேசியக் கொடியை ஏந்தி செல்வதால் அரசுக்கு என்ன பிரச்சனை உள்ளது? என கேள்வி எழுப்பினார்.

மேலும், சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியகொடியை கையில் ஏந்தி போராடினார். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கொடியை எடுத்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது நீதிமன்றத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அரசின் நிலை இப்படியே தொடர்ந்தால் ஒரு நாள் மக்கள் ஏன் இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தோம் என நினைத்து விடுவார்கள்.

எனவே, பேரணியில் பங்கேற்கும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலையை காவல்துறையிடம் பாஜக நிர்வாகம் தெரிவிக்க வேண்டும். தேசியக்கொடியை ஏந்தி செல்வதை தடுக்கக்கூடாது என காவல்துறை இயக்குநர் அறிவிக்க வேண்டும். கட்சிக்கொடியை ஏந்தி செல்ல தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு கட்சிக் கொடியை ஏந்தி சென்றால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். பேரணிக்கு காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. எந்தப் பகுதியில் பேரணி நடத்தப்படுகிறது என தெரிவித்தால் மட்டும் போதும்' என்ற நிபந்தனையின்படி பாஜக மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:சுதந்திர தினம் தொடர் விடுமுறை; சென்னையிலிருந்து ஸ்பெஷல் பஸ்கள் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.