ETV Bharat / state

சுங்கத்துறையிடம் தப்பி ஏர்போர்ட் போலீசிடம் சிக்கிய சிங்கப்பூர் 'குருவி'.. பிடிபட்டது எப்படி? - airport gold smuggling

Kuruvi in Chennai Airport: சிங்கப்பூரிலிருந்து 700 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்த 'குருவி' சென்னை விமான நிலைய சுங்கத்துறையிடம் சிக்காமல் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து போலீசாரிடம் சிக்கியது எப்படி என்பதை விளக்குகிறது இந்த செய்தி.

கைது செய்யப்பட்ட இருவர்
கைது செய்யப்பட்ட இருவர் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 6:43 PM IST

சென்னை: சிங்கப்பூரில் இருந்து தனியார் விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்துள்ளது. அதில் வந்த பயணிகள் அனைவரும் அனைத்து சோதனைகளையும் முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்தனர். அப்போது, விமான நிலைய வருகை பகுதிக்கு வெளியே இரண்டு நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

வெகுநேரமாக அவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததைக் கண்ட சென்னை விமான நிலைய போலீசார், இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், இருவரையும் சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் கடலூர் மாவட்டம் கஞ்சிரன்குளத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (23), சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கலீல் அலி (34) என்பது தெரிய வந்தது. மேலும், கோவிந்தராஜ் மெக்கானிக்கல் வேலை நிமித்தமாக சிங்கப்பூர் சென்று விட்டு அங்கிருந்து சென்னை திரும்பும் போது, அங்குள்ள நபர் ஒருவர் தங்கத்தைக் கொடுத்து அதனை சென்னை விமான நிலையத்தில் கலீல் அலியிடம் கொடுக்கும்படி கொடுத்து அனுப்பி உள்ளார்.

இதையடுத்து, தங்கத்துடன் சென்னை வந்த கோவிந்தராஜ், விமான நிலையத்தில் சுங்கத்துறை சோதனையில் சிக்காமல் தங்கத்தை நைசாக கடத்தி வெளியே கொண்டு வந்துள்ளார். வெளியே வந்ததும், அந்த தங்கத்தை கோவிந்தராஜ் கலீல் அலியிடம் கொடுக்காமல், அந்தத் தங்கத்தை அபகரித்துக் கொண்டு சென்று விடுவோம் என எண்ணி, அவரின் நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்ப முயன்று உள்ளார்.

அப்போது, கோவிந்தராஜ் கலீல் அலியிடம் சிக்கி உள்ளார். இதனால், கலீல் அலி தங்கத்தைக் கேட்டு கோவிந்தராஜ் உடன் பிரச்சினையில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தது போதுதான் இருவரும் போலீசாரிடம் சிக்கியது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், ஏற்கனவே இதே போன்று கோவிந்தராஜ் சிங்கப்பூர் சென்று விட்டு சென்னைக்கு வரும்போது குருவியாக செயல்பட்டு தங்கம் கடத்தி வந்து கைமாற்றி விட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும், இதற்காக கோவிந்தராஜ் 7,000 ரூபாய் கமிஷனும் வாங்கியுள்ளார்.

இதையடுத்து, கோவிந்தராஜ் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த 700 கிராம் தங்கத்தை விமான நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், இரண்டு நபர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட 700 கிராம் தங்கத்தையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, கோவிந்தராஜ் சுங்கச் சோதனையில் சிக்காமல் எப்படி தங்கத்தை வெளியில் கடத்திக் கொண்டு வந்தார்? இவர் சர்வதேச தங்க கடத்தல் கும்பலுக்கு குருவியாகச் செயல்பட்டு உள்ளாரா? தங்கத்தைப் பெற வந்த கலீல் அலி முழு விவரம் என்ன, அவருக்கும், தங்க கடத்தல் கும்பலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: என் பெயரைப் பார்த்தாலே திமுகவினர் நடுங்குகின்றனர்.. குஷ்பூ பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.