ETV Bharat / state

ஃபார்முலா 4 கார் பந்தயம்; எல்.முருகன் முக்கிய கேள்வி! - Formula 4 car racing

Formula 4 Car Racing: சென்னையின் மையமான பகுதியில் கார் நடத்த வேண்டுமா, ஏற்கனவே ஸ்ரீபெரும்பத்தூரில் கார் ரேஸ் நடத்துவதற்கான பகுதி உள்ளது. அதற்கான அடிப்படை உள்கட்டமைப்பு போன்ற வசதிகள் அங்கு உள்ளது. அங்கு நடத்தாமல் இங்கு நடத்துகிறார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

எல் முருகன், கார் பந்தயம்
எல் முருகன், கார் பந்தயம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2024, 5:45 PM IST

சென்னை: சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும் புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க நிகழ்வு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தெலங்கனா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

முன்னதாக மேடையில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பெரிய வரலாற்று புரட்சி ஏற்பட்டுள்ளது. ரயில்வே துறையில் மட்டுமே இன்று அதிநவீன ரயில் போக்குவரத்தை நாம் பார்க்க முடியும். முன்பெல்லாம் புல்லட் ரயிலை சினிமா மற்றும் பேப்பரில் மட்டும் தான் பார்ப்போம். இன்று பிரதமர் மோடியின் முயற்சியால் தான் வந்தே பாரத் ரயில் கொண்டு வரப்பட்டுள்ளது.

சொந்த நாட்டில், சொந்த முயற்சியில், சொந்த தொழில்நுட்பம் குறிப்பாக சென்னையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் மற்ற மாநிலங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் தான். வந்தே பாரத் ரயிலானது மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் பயன்பெறும் விதமாக உள்ளது. அதுமட்டுமின்றி, சென்னையை மையமாக வைத்து இயக்கப்படுகிறது.

காலையில் சென்னையில் கிளம்பினால் மதியம் கோவை சென்றுவிடலாம். மதியம் கோவையில் இருந்து புறப்பட்டால் இரவு சென்னை வந்துவிடலாம். இப்படிப்பட்ட சிறப்பான ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ளார்.

ரயில்வே அமைச்சருக்கு இதற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து ரயில்வே தொடர்பாக எந்த திட்டம் போனாலும், அதற்கு உடனடியாக ரயில்வே துறை அமைச்சர் ஒப்புதல் அளிக்கிறார். தற்போதைய பட்ஜெட்டில் கூட ரூ.6,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் வளர்ச்சி மிக அபரிதமான வளர்ச்சி.

3வது முறையாக பிரதமர் அவர்கள் தொடர்ந்து ஆட்சி அமைத்து வருகிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆட்சியில் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தான் ரயில்வேயின் செயல்பாடாக இருக்கிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர், "தமிழகத்தில் கிராமங்களில் கூட போதைப் பொருள் புழக்கத்தில் இருந்து வருகிறது. போதைப் பொருள்களினால் ஒவ்வொரு கிராமங்களிலிருந்து 30 பேர் இளம் விதவையாக இருந்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் தான் தமிழ்நாடு இருந்து கொண்டிருக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு மிக தீவிரமாக முனைப்பு காட்ட வேண்டும்.

விளையாட்டை ஊக்குவிக்க வேண்டியது நமது பொறுப்பு, கடமை. ஆனால் சென்னையின் மையமான பகுதியில் நடத்த வேண்டுமா ஏற்கனவே ஸ்ரீபெரும்பத்தூரில் கார் ரேஸ் நடத்துவதற்கான பகுதி உள்ளது. அதற்கான அடிப்படை உள்கட்டமைப்பு போன்ற வசதிகள் அங்கு உள்ளது. அங்கு நடத்தாமல் இங்கு நடத்துகிறார்கள். இது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என மக்கள் தெரிவிக்கிறனர்.

அங்கு இன்னும் பிரமாண்டமாக நடத்தி இருக்கலாம். இருக்கின்ற இந்த குறுகிய இடத்தில் நடத்துவதற்கான அவசியம் என்ன? இந்தப் பந்தயத்தை ஸ்ரீபெரும்புதூரில் நடத்தி இருந்தால் எந்த இடையூறும் இருந்திருக்காது. தமிழ், ஆங்கிலம் தவிர்த்து வேறு ஏதேனும் ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் மத்திய அரசு கூறுகிறது தவிர இந்தியை நாங்கள் புகுத்தவில்லை. தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் கற்றுக் கொடுப்பதினால் தமிழுக்கு தான் பெருமை. மேலும் தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசிற்கு எந்த ஒரு தடையும் கிடையாது" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஃபார்முலா 4 கார் பந்தயம்; எப்ஐஏ சான்று பெற இரவு 8 மணி வரை அனுமதி! - Formula 4 car race Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.