ETV Bharat / state

ஆளில்லாத வீடுகள் தான் டார்கெட்.. வீடு புகுந்து கொள்ளையடிக்கும் பெண்கள்.. சத்தியமங்கலம் பகீர் சம்பவம்! - Sathyamangalam Robbery - SATHYAMANGALAM ROBBERY

Sathyamangalam Robbery: சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்ட பகுதியில் புகுந்து கைகளில் கிடைக்கும் பொருட்களை திருடி செல்லும் பெண்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

வீடு புகுந்து கொள்ளையடிக்கும் பெண்
வீடு புகுந்து கொள்ளையடிக்கும் பெண் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 12:52 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள தயிர்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். விவசாயியான இவர் தோட்டம் வைத்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (புதன்கிழமை) மதியம் இவரது தோட்டத்து வீட்டிற்கு அருகில் ஒரு கைக்குழந்தையுடன் கூடிய பெண் உள்பட நான்கு பெண்கள் நடமாடியுள்ளனர்.

சிசிடிவி காட்சிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

உணவு கேட்பது போலவும், பிச்சை எடுப்பது போலவும் அங்கும் இங்கும் சுற்றி திரிந்த அப்பெண்கள், வீடுகளில் யாரும் இல்லை என்றால் கைகளில் கிடைக்கும் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். இது கணேசன் வீட்டின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், நான்கு பெண்களில் ஒருவர் ஆளில்லாத வீட்டினுள் நுழைந்து பொருட்களை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுபோன்ற பெண்கள் கூட்டம் நடமாடுவதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

join ETV Bharat WhatsApp channel Click here
join ETV Bharat WhatsApp channel Click here (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு! - 3 people drown thamirabarani river

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.