ETV Bharat / state

தேர்தல் விதிமீறல்; 20 புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு! - Puthiya Needhi Katchi

Puthiya Needhi Katchi: ஆம்பூர் அருகே, தேர்தல் ஆணையத்தில் அனுமதியில்லாமல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக புதிய நீதிக் கட்சியின் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் அசோக்குமார் உள்பட 20 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 10:15 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியில்லாமல் கூட்டம் நடத்தியதாக, பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சியின் நிர்வாகிகள் மீது தேர்தல் பறக்கும் படை அலுவலர் மணிராஜன், ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில், பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சி மாவட்டத் தலைவர் அசோக்குமார் உள்பட 20 பேர் மீது 143 மற்றும் 188 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். .மேலும், ஏற்கனவே கடந்த மார்ச் 19 அன்று, அனுமதியின்றி கட்சி கூட்டம் நடத்தியதாக புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் மீது ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு! - Case Filed Against OPS

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.