ETV Bharat / state

பைக்கிற்கு டியூ கட்டவில்லை என புகார்.. பெண்ணை தாக்கியதாக ஊழியர் மீது வழக்குப்பதிவு! - mayiladuthurai finance company case - MAYILADUTHURAI FINANCE COMPANY CASE

Mayiladuthurai finance company case: மயிலாடுதுறையில் இருசக்கர வாகனம் வாங்கி கணவர் பணம் செலுத்தவில்லை எனக்கூறி தன்னை தாக்கியதாக மனைவி அளித்த புகாரின் பேரில் தனியார் வாகன விற்பனை நிறுவன நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Attacked woman Image
தாக்கப்பட்ட பெண் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 2:17 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை: அவையாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மனைவி நிவேதா. இவர் தனியார் பார்சல் சர்வீஸ்சில் வேலை செய்து வருகிறார். நிவேதா கடந்த ஜூன் 11ஆம் தேதி மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் உள்ள தனியார் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் தனது கணவர் குமார் பெயரில் இருசக்கர வாகனத்தை தனியார் வங்கியில் 24 மாதம் தவணை முறையில் பணம் செலுத்துவதாக ஒப்பந்தத்தின் படி ரூபாய் 6 ஆயிரத்து 900 முன்பணம் கட்டி வாகனத்தை வாங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், குமார் கடந்த மே மாதம் மட்டுமே இரண்டு வாகனங்களை இதே தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் வாங்கியுள்ளதாக தெரிகிறது. அந்த வாகனங்களுக்கு தவணை பணத்தைச் செலுத்தவில்லை எனவும், அதனால் குமாரின் வங்கிக் கணக்கின் சிவில் ஸ்கோர் குறைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே, இருசக்கர வாகனம் வாங்கி பணம் செலுத்தவில்லை எனக்கூறி கடந்த ஜூன் 11ஆம் தேதி வாங்கிய வாகனத்தை திருப்பி ஒப்படைக்கும்படி அந்த தனியார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு நிர்வாகியான முருகமங்கலத்தை சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வாகனத்தை குமார் ஒப்படைக்கவில்லை. நேற்று ஆனதாண்டவபுரம் அருகே குமார் மனைவி நிவேதா இருசக்கர வாகனத்தில் சென்ற போது சௌந்தர்ராஜன் நிவேதாவை வழிமறித்து தாக்கியுள்ளார். அப்போது நிவேதாவின் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் அறுந்ததாக கூறப்படுகிறது.

மேலும், தாக்குதலுக்குள்ளான நிவேதா தனது கணவர் குமாரிடம் தொலைபேசி வாயிலாக நடந்ததை கூறியுள்ளார். உடனடியாக அங்கு சென்ற குமார், நிவேதாவை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து நிவேதா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், அதிக வாகனங்களை விற்பனை செய்வதற்காக, உரிய ஆவணங்களை சரிபார்க்காமல் வாகனத்தை கொடுத்துவிட்டு தகராறில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார், சௌந்தர்ராஜன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: குடையால் முகத்தை மறைத்து பைக் திருட்டு.. மர்ம நபரை மடக்கி பிடித்த மயிலாடுதுறை போலீசார்! - mayiladuthurai Bike Theft

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.