ETV Bharat / state

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்; வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு! - three sections against lawyer

Three Sections Against Lawyer: சென்னை உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் சிவகுருநாதன் மீது திருவான்மியூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கறிஞர் சிவகுருநாதன்
வழக்கறிஞர் சிவகுருநாதன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 9:50 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சம்போ செந்தில் உடன் சேர்ந்து சென்னையில் மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் வழக்கறிஞர் சிவகுருநாதனை நேற்று வண்ணாரப்பேட்டையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கடந்த ஜூலை 22ஆம் தேதி இரவு சென்னை திருவான்மியூர் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் தமிழன்பன் செல்போனுக்கு தொடர்பு கொண்ட வழக்கறிஞர், நான் இருக்கும் இடத்தை நீதான் காட்டி கொடுத்தாயா என்றும், நான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் உன்னை கொலை செய்து விடுவேன் என்று ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உதவி ஆய்வாளர் புகார் அளித்ததை தொடர்ந்து, திருவான்மியூர் போலீசார் 296 (b), 353, 506 (1) கொலை மிரட்டல் விடுத்தது, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஒரு லட்சம் கன அடியை தொட்ட ஒகேனக்கல் காவிரி.. பல்வேறு துறையினர் தொடர் கண்காணிப்பு! - HOGENAKKAL CAUVERY RIVER

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.