ETV Bharat / state

எப்படி வந்து சிக்கியிருக்கேனு பாத்தியா?.. கூகுள் மேப் உதவியால் படிக்கட்டுகள் நடுவே சிக்கிய கார்! - car stuck between stairs in Nilgiri

Car stuck between stairs: கூகுள் மேப் உதவியுடன் சுற்றுலா சென்ற கார் செங்குத்தான படிக்கட்டில் சிக்கிக் கொண்ட நிலையில், அதை போலீசார் உதவியுடன் சுற்றுலா பயணிகள் சாதுர்யமாக மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கூகுள் மேப் உதவியால் படிக்கட்டுகள் நடுவே சிக்கிக்கொண்ட கார்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 5:39 PM IST

Updated : Jan 29, 2024, 6:25 PM IST

கூகுள் மேப் உதவியால் படிக்கட்டுகள் நடுவே சிக்கிய கார்

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களின் எல்லைப் பகுதியாக விளங்குகிறது. மலை பிரதேசமான நீலகிரிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கூடலூர் வழியாகவே செல்கின்றனர். இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு கடந்த ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு விடுமுறை மற்றும் அதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் அடுத்தடுத்து விடுமுறை விடப்பட்டு இருந்ததால், கடந்த 3 நாட்களாக நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இதனிடையே கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தங்களது சொந்த காரில் நீலகிரிக்கு சுற்றுலா வந்து, சுற்றுலாவை முடித்து விட்டு, கூகுள் மேப் (Google Map) உதவியுடன், மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த நிலையில் கூடலூர் அருகே வந்த போது, கூகுள் மேப் காட்டிய வழியில், திடீரென செங்குத்தான படிக்கட்டுகள் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர், காரை சாதூரியமாக படிக்கட்டுகளில் நிறுத்தினார்.

அதன் பின்னர், அவ்வூர் மக்கள், காவல் துறையினர் மற்றும் பிற சுற்றுலாப் பயணிகள் காரை மீட்க முயற்சி செய்தனர். அவர்களின் உதவியுடன், படிக்கட்டுகளில் கற்கள் அமைத்து, ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கார் சாலைக்கு கொண்டுவரப்பட்டது. கூகுள் மேப் உதவியுடன் கார் செங்குத்தான படிக்கட்டில் சிக்கிக் கொண்டது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சென்னையில் பறக்கத் தயாரான பெலிக்கன் பறவைகள்; எண்ணெய் கசிவு பாதிப்பிலிருந்து மீண்டு விட்டதாகத் தகவல்!

Last Updated : Jan 29, 2024, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.