ETV Bharat / state

கார் மீது பைக் மோதியதில் தம்பதி பலி.. நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க சென்ற போது சோகம்! - Two killed in accident - TWO KILLED IN ACCIDENT

tiruvallur car accident: திருவள்ளூர் அருகே நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்பதற்காக சென்று கொண்டு இருந்த தம்பதியினர் மீது கார் மோதியதில் கணவன் & மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த தம்பதியினர் மற்றும் விபத்து ஏற்படுத்திய கார்
உயிரிழந்த தம்பதியினர் மற்றும் விபத்து ஏற்படுத்திய கார் (Credits -ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 11:03 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள பட்டாபிராமபுரம் பஞ்சாயத்து செல்லும் புதிய பை-பாஸ் பகுதியில் சென்று கொண்டு இருந்த சொகுசு கார் ஒன்று, சாலையைக் கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திடீரென்று பிரேக் பிடித்துள்ளது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்று கொண்டு இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டு இருந்த கணவன் & மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கணவன் & மனைவி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் இருவரின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை மேற்கொண்டனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் திருத்தணி அருகில் உள்ள கே.ஜி கண்டியை சேர்ந்த இளங்கோவன் என்பது தெரியவந்துள்ளது.

அதே போல் விபத்தில் உயிரிழந்த தம்பதியினர், சென்னை அருகில் உள்ள ஆவடி பகுதியை சேர்ந்த மெய்யழகன் (50), லஷ்மி வயது (45) என்பதும் இருவரும் அப்பகுதியில் உள்ள டியூப் தயாரிக்கும் தொழிற்சாலையில் உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் கணவன் & மனைவி இருவரும் அவர்களது சொந்த ஊரான பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பகுதியில் திருமண நிச்சயதார்த்தத்திற்காக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது இந்த விபத்தில் சிக்கி இருவரும் இறந்துள்ளனர்.

இறந்து போன இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு பெண் காவலர்கள் பாதுகாப்பில் அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.