ETV Bharat / state

நிர்மலா தேவி விவகாரம்: "பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் விசாரணை நடத்த முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம்..! - Professor Nirmala devi case - PROFESSOR NIRMALA DEVI CASE

Professor Nirmala devi issue: மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்றதாகக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகாரளிக்காமல் விசாரணை நடத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Madras High court
Madras High court
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 5:01 PM IST

சென்னை: கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்றதாகக் கடந்த 2018ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக சிபிசிஐடி விசாரிக்கும் வழக்கை, பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டுமெனப் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா, நீதிபதி சத்தியநாராயணன் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த குற்ற வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து, தீர்ப்பு ஏப்ரல் 26ஆம் தேதிக்கு விசாரணை நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் விசாரணை நடத்த முடியாது என்பதால், ஏதேனும் புகார் அளிக்கப்பட்டிருந்தால் தெரிவிக்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு (ஏப்ரல் 18) தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம்: ஜூலை 3ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.