சென்னை: கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான விஜய், அரசியல் கட்சி தொடங்கி அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் மும்முரம் காட்டி வந்தார். முதலாவதாக, தவெக பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்தார். மேலும், கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று தவெக கொடி மற்றும் கட்சிப் பாடலை விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் இந்நிகழ்வில் பேசிய விஜய், கட்சிக் கொடியின் பின்னணியில் உள்ள வரலாறு குறித்து மாநாட்டில் பேசுகிறேன் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “தவெக கொடியை தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியதில் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி என்றார்.
மேலும், எங்கள் நிர்வாகிகள் அரசிடம் முறையாக அனுமதி பெற்று தமிழ்நாடு முழுவதும் கட்சிக் கொடியை நடுவர் எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து கட்சி மாநாடு எப்போது என கேட்டதற்கு, மாநாடு நடக்கும் தேதி, நடைபெறும் இடம் குறித்து தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பார் என்றார்.
பின் மாநாட்டிற்கு எவ்வளவு நபர்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, தமிழ்நாடு முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர் என்றார். மேலும், விஜய் எப்போது செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப் போகிறார் என்ற கேள்விக்கு, புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்காமல் சிரித்துக் கொண்டு சென்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வாகைப்பூவுக்கு அதிகரிக்கும் மவுசு.. விஜய்க்கு வெற்றி வாகை சூடுமா வாகைப்பூ? தவெக கொடியின் மூலம் தெரிவிப்பது என்ன? - Vijay TVK Flag