ETV Bharat / state

கர்நாடகா அங்கன்வாடிகளில் நடக்கும் அவலம்? தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதலின் பின்னணி என்ன? - processed breast milk seized - PROCESSED BREAST MILK SEIZED

Breast milk Bottles seized at Arumbakkam: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஆர்.கே.மருந்து நிறுவனத்தில் பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் மற்றும் தாய்ப்பால் பவுடர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தாய்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும் புகைப்படம்
தாய்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 5:23 PM IST

Updated : Jun 3, 2024, 5:53 PM IST

தாய்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும் வீடியோ மற்றும் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கர்நாடக மாநிலத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் தாய்மார்களிடம் தாய்ப்பால் பெற்று, அதனை பதப்படுத்தி பின்னர் தமிழ்நாட்டில் விற்பனை செய்து வந்த ஆர்.கே.மருந்து நிறுவனத்தில் இன்று (ஜூன் 3) உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்தார். மேலும் அவற்றை வாங்கிப் பயன்படுத்திய தனியார் மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஆர்.கே.பார்மா என்ற தனியார் மருந்து நிறுவனத்தில் சட்டத்திற்கு புறம்பாக தாய்ப்பாலை பதப்படுத்தப்பட்டு அடைத்து விற்பனை செய்து வருவதாக கண்டறியப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் பாட்டில்களையும், பவுடர் வடிவிலான பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் தாய்ப்பாலை விற்பனை செய்யக்கூடாது எனக் கூறி, அதனை சீல் வைத்தனர். இந்த மருந்து நிறுவனத்தில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஓராண்டாக விற்பனை செய்யப்பட்டவற்றின் பட்டியலையும் பெற்றனர்.

தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் கூறுகையில், “மத்திய அரசு சார்பில் வணிக ரீதியில் தாய்ப்பால் விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து தாய்ப்பால் விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள 18 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், சென்னை அரும்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், தற்போது அரும்பாக்கம் பகுதியில் உள்ள மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.
இந்த ஆய்வில் சட்ட விரோதமாக 380 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது, மேலும் தாய்ப்பால்கள் பவுடர் வடிவிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் பவுடர் வடிவிலான தாய்ப்பால்கள் கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறை.

பறிமுதல் செய்யப்பட்ட பாட்டிலில், ஒரு வருடம் இந்த தாய்ப்பால் பயன்படுத்தலாம் என்பது போன்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஊட்டசத்து போன்ற இணைப்பொருட்கள் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உணவு பாதுகாப்புத் துறை சார்பில் எந்த ஒரு சான்றிதழ்களும் பெறாமலே இந்த தாய்ப்பால் பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது முதற்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தாய்ப்பால் 1,239 ரூபாய்க்கு ஒரு பாட்டிலும், 900 ரூபாய்க்கு ஒரு பாட்டிலும் என இரண்டு விதங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. தாய்ப்பால் மாதிரிகளைச் சேகரித்து லேபிற்கு அனுப்பி, அந்த ஆய்வின் முடிவில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் தாய்ப்பாலை சட்டவிரோதமாக விற்பனை செய்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தாய்ப்பால் அனைத்தும் கர்நாடகாவில் இருக்கக்கூடிய பெரு நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு இங்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் விநியோகஸ்தராக செயல்பட்டு வந்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக இந்நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது.

இந்த நிறுவனத்தில் இருந்து பல மருத்துவமனைகளுக்கு தாய்ப்பால் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப் பெற்று இருக்கிறது. அந்த அடிப்படையில், மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம், மருத்துவமனைகளிலும் வணிக ரீதியில் தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டால் அங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடக பெரு நிறுவனத்திடம் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளோம். அதேபோல், இந்த மருந்தகத்தின் மீதும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, தாய்ப்பால் மற்றும் பவுடர்கள் கைப்பற்றப்பட்டு அந்த குளிர்சாதனங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவரது விளக்கம் ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்படும். சென்னையில் வணிக ரீதியில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவது குற்றம், அப்படி செயல்பட்டால் நூறு சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும்.

தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தாய்ப்பால் சுரக்கும். அவர்கள் அதனை அரசு மருத்துக் கல்லூரியில் உள்ள தாய்ப்பால் வங்கியில் கொடுக்கலாம். அது முறையாக பராமரிக்கப்பட்டு, தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படும். தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவது குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளிக்கலாம்.

இந்த நிறுவனத்தில் விசாரணை செய்ததில், முதல்கட்டமாக கர்நாடகாவில் தாய்மார்களை அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் அணுகி அவர்களிடம் பணம் கொடுத்து பெற்று பால் பாட்டிலில் அடைத்தும், பவுடராக செய்தும் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சர்டிபிகேட் வாங்க வந்த மாணவரை வேலை வாங்கியதாக பெற்றோர் புகார்.. வைரலாகும் ஆசிரியரின் வீடியோ! - HEADMASTER VIRAl VIDEO

Last Updated : Jun 3, 2024, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.