திண்டுக்கல்: பழனியில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு, முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இன்று பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு மின்னணு குறுஞ்செய்தி வந்ததாகக் கூறி, திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி, ஆர்பிஎஃப் இன்ஸ்பெக்டர் சுனில் குமார், பழனி நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார், வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
ரயில் நிலையத்தின் பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகள், குப்பைத்தொட்டி, கடைகள் மற்றும் ரயில்வே தண்டவாளம் என அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். மேலும், பழனி பேருந்து நிலையம் மற்றும் அடிவாரப் பகுதிகளிலும் வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல் அருகே ரூ.3.10 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்! - Gold Seized