ETV Bharat / state

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அலறி அடித்து பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்! - மாங்காடு பள்ளி வெடிகுண்டு மிரட்டல்

Bomb threat to a private school: மாங்காடு அருகே உள்ள தனியார்ப் பள்ளிக்கு ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் மாணவர்களின் புத்தகப் பைகள், வாகனங்கள் என பல்வேறு இடங்களில் தீவிரச் சோதனை மேற்கொண்டனர்.

மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 9:58 PM IST

காஞ்சிபுரம்: மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் மத்திய அரசு பாடத் திட்டத்தின் கீழ் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குத் தங்களது பிள்ளைகளைப் பெற்றோர் அழைத்து வந்து விட்டுச் சென்றனர். வகுப்புகள் தொடங்கிய சிறிது நேரத்தில் பள்ளியில் உள்ள அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் வழக்கம் போல் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அந்த வெடிகுண்டு சிறிது நேரத்தில் வெடித்து விடும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம், மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து மோப்ப நாய் உதவியுடன் வந்து பள்ளி வளாகம் முழுவதும் தீவிரச் சோதனை மேற்கொண்டனர். வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்கள் அனைவரும் பள்ளியின் பின் பகுதியில் உள்ள மைதானத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த தகவலையடுத்து வீட்டிற்குச் சென்ற பெற்றோர் பலர், அலறி அடித்துக் கொண்டு வந்து தங்களது பிள்ளைகளைப் பதற்றத்துடன் அழைத்துச் சென்றனர். மேலும் மாணவர்கள் கொண்டு வந்த புத்தகப் பை ஏதும் பள்ளி நிர்வாகம் கொடுத்து அனுப்பவில்லை, புத்தகப் பைகள் அனைத்தும் பள்ளி வகுப்பறையிலேயே உள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மாணவர்களின் புத்தகப் பைகள், வாகனங்கள் என பல்வேறு இடங்களில் தீவிரச் சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த வெள்ளியன்று இதே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து அது வெடிகுண்டு புரளி என தெரிவித்த நிலையில், தற்போது மீண்டும் அதே பள்ளிக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும், பள்ளி நிர்வாகத்தினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்த பள்ளியில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வெடிகுண்டு மிரட்டலால் தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

அந்த மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதி வருவதும், நேற்றைய தினமே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாகவும், நேற்று ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் இன்று பள்ளி வகுப்பறைகள் தொடங்கிய பின்பு ஊழியர்கள் வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சலைத் தாமதமாகப் பார்த்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம்: சுற்றுச்சூழல் அனுமதி கோரி தொழில் வளர்ச்சிக் கழகம் விண்ணப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.