ETV Bharat / state

டெல்லி முதலமைச்சராக தயாராகும் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி? ஆம் ஆத்மியிலும் குடும்ப ஆட்சி - வானதி சீனிவாசன் - Vanathi srinivasan - VANATHI SRINIVASAN

Vanathi Srinivasan: அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி டெல்லி முதலமைச்சராக தயாராகி வருவதாகவும், திமுகவைப் போல ஆம் ஆத்மியிலும் குடும்ப ஆட்சி இருப்பதாகவும், இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை ஆதரிப்பதில் ஆச்சரியமில்லை எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 12:43 PM IST

கோவை: நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கிடையே, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும். நட்சத்திர பேச்சாளர்களும் தங்களது வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, குடும்ப ஆட்சி நடத்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆதரவு அளிப்பதில் வியப்பில்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசை விமர்சித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால் அவர்களை கைது செய்ய குஜராத் வரை விமானத்தில் செல்கிறது, தமிழக காவல்துறை. நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்கிறது. இப்படி காவல்துறையை, தங்களது ஏவல் துறையாகப் பயன்படுத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், அமலாக்கத்துறை, வருமானத்துறை செயல்பாடுகள் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

அமலாக்கத்துறை, வருமானத்துறை நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது. ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றங்கள் தான் கைது போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கின்றன. ஆதாரங்கள் இல்லாமல் இரு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா, ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோரை கைது செய்ய முடியாது.

இந்தியாவில் நீதித்துறை, உலகின் எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு சுதந்திரமாகவும், அரசின் தலையீடு இல்லாமல் இயங்க கூடியது. கெஜ்ரிவால் கைது பற்றி அவதூறு பரப்புபவர்கள் இந்திய நீதித்துறையை நோக்கி கைகாட்டுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கெஜ்ரிவால் சிறைக்குச் சென்றுள்ளதால் அவரது மனைவி முதலமைச்சராக தயாராகி வருகிறார். அதாவது திமுகவைப் பின்பற்றி ஊழல் செய்த கெஜ்ரிவால் அடுத்து குடும்ப ஆட்சிக்கும் தயாராகி விட்டார். எனவே ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் திமுக, கெஜ்ரிவாலை ஆதரிப்பதில் வியப்பில்லை.

தனிப்பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் பாஜக அரசும், பிரதமர் மோடியும் ஜனநாயகப் பாதையில் இருந்து ஒரு அங்குலம்கூட நழுவி விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். பிரதமர் மோடி ஆட்சியை குறை கூறுபவர்கள், இந்திரா காந்தி தனிப்பெரும்பான்மையுடன் இருந்தபோது என்ன நடந்தது என்பதையும், நெருக்கடி நிலையை பிரகடனம் செய்து, அரசியலமைப்பு சட்டத்தையே முடக்கியவர். எனவே, மத்திய அரசு மீது திரும்ப திரும்ப அவதூறு பரப்புவதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்த பாஜக மாநில நிர்வாகி தடா பெரியசாமி.. பாஜக மீதான அதிருப்திக்கு காரணம் என்ன? - Thada Periyasamy

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.