சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88 ஆவது நினைவு தினத்தையொட்டி
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரத்தின் படத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “வ.உ.சி அவருக்கு நினைவஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். இந்திய பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்று போராடியவர் வ.உ.சிதம்பரனார். அவர் பெயரை கொண்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு 170 கோடி ரூபாயில் மேம்பாட்டு திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.
தமிழக வளர்ச்சியில் மத்திய அரசு அதிக அக்கறை கொள்கிறது. அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணி புரிவது தவறு என்ற சட்டம் தெலுங்கானாவில் உள்ளது. அதேபோன்று தமிழகத்தில் அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிய கூடாது என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை சரியாக நிரப்பாதனால்தான் அரசு மருத்துவர்கள் சிறப்பான பணியை செய்ய முடிவதில்லை.
திருமாவளவனின் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு அவர் கேட்டதை செய்வோம் என முதலமைச்சர் கூறுகிறாரே தவிர, மக்கள் மனதில் என்ன இருக்கு என்பதை புரிந்து கொண்டு அவர் நடப்பதில்லை. திருமாவளவனின் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவதாக முதல்வர் கூறினார். ஆனால் திருமாவளவன் கூட்டத்தைக் கூட்டி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வைத்த கோரிக்கையை முதலமைச்சர் இன்னும் நிறைவேற்றவில்லை.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் இருவர் காயம்
நடிகை கஸ்தூரி தவறான கருத்துக்களை தெரிவித்ததற்கு மன்னிப்பு கேட்டார். இருந்த போதிலும் அவரை ஒரு தீவிரவாதி போன்று நடவடிக்கை எடுப்பது தவறு. நடிகை கஸ்தூரி விஷயத்தில் தமிழக அரசு பாரபட்சமாக இருந்து வருகிறது.
காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் கொலை செய்யப்பட்டு இத்தனை மாதங்கள் ஆகியும், கொலையாளிகளை அரசு கண்டறியவில்லை. வேங்கைவயல் விவகாரத்தில் தீர்வு கிடைக்கவில்லை. எவ்வளவோ பிரச்னைகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் இருக்கும் அரசு, கஸ்தூரியை தீவிரவாதி போல நடத்துவது பாரபட்சமான நடவடிக்கையாகும்.
தமிழக வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. அதனாலதான் இன்று 16வது நிதிக்குழு தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளது. நிதிக்குழுவிடம் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதலமைச்சர் முன் வைத்துள்ளார். இதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதே கோரிக்கையை கடந்த நாட்களுக்கு முன்பாக நிதிக்குழுவை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக கோரிக்கையை வைத்திருக்க வேண்டும். ஆனால் அதே நிராகரித்தார். நிதி ஆயோக் போன்ற கூட்டங்களை புறக்கணிக்காமல் தமிழ்நாடு அரசு அதில் கலந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்