ETV Bharat / state

நெல்லையில் அயோத்தி கும்பாபிஷேக நேரலைக்கு அனுமதி மறுப்பு - பாஜகவினர் போராட்டம்!

Ayodhya Live telecast prohibited in Nellai: அயோத்தி கும்பாபிஷேக நேரலையை பாளையங்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் ஒளிபரப்ப போலீசார் அனுமதி மறுத்ததால், பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லையில் அயோத்தி கும்பாபிஷேக நேரலைக்கு அனுமதி மறுப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 1:40 PM IST

திருநெல்வேலி: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது. இதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து ராமர் பக்தர்கள், அரசியல் தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்த வண்ணம் உள்ளனர். அயோத்திக்கு நேரில் செல்ல முடியாதவர்களின் வசதிக்காக, கும்பாபிஷேக விழாவை நாடு முழுவதும் நேரலை செய்ய விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜகவினர் ஏற்பாடு செய்தனர்.

ஆனால், தமிழ்நாட்டின் கோயில்களில் சிறப்பு பூஜைகள் உள்பட ராமர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை நேரலை செய்வதற்காக, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில், விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜக சார்பில் எல்இடி திரை அமைத்து, பொதுமக்கள் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதை அறிந்த பாளையங்கோட்டை காவல்துறையினர், மண்டபத்தில் கும்பாபிஷேக நிகழ்வை ஒளிபரப்புவதற்கு அனுமதி கிடையாது என்று கூறி, மண்டபத்தை பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள், அந்தப் பகுதியில் கூடி ராமநாம ஜெபத்தை நடத்தி, மண்டபத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கும்பாபிஷேகத்தை ஒளிபரப்பு செய்வதற்கு அனுமதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு, அங்கு கும்பாபிஷேக நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் செய்தனர்.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: 10,000 சிசிடிவி, டிரோன் கேமராக்களுடன் உச்சக்கட்ட பாதுகாப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.