ETV Bharat / state

அமைச்சர் சேகர்பாபு கோயில்களை திமுக மயமாக்க முயற்சிக்கிறார் - எச்.ராஜா விமர்சனம் - H raja slams DMK - H RAJA SLAMS DMK

H Raja: அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வரவேற்பு தெரிவித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, தமிழ் சினிமாவை முதலமைச்சர் குடும்பம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல, கோயில்களை திமுக மயமாக்க அமைச்சர் சேகர்பாபு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

எச். ராஜா, சேகர்பாபு
எச். ராஜா, சேகர்பாபு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 10:59 AM IST

திண்டுக்கல்: பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நேற்று (ஆக.8) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா கலந்து கொண்டார்.

எச். ராஜா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

வக்பு சட்ட திருத்த மசோதா: செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு இஸ்லாமிய அமைப்புகளே வரவேற்பளித்துள்ளது. ஒரு தனிநபரின் சொத்துக்களை வக்பு வாரியம் தன்னுடையது என்று அறிவித்துக் கொண்டால் அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு கூட செல்ல முடியாத நிலை தற்பொழுது உள்ளது. மேலும் வக்பு வாரியத்தில் இருந்து தடையில்லா சான்று பெற்றாலே பொதுமக்கள் தங்களுடைய சொத்துக்களை விற்க முடியும் என்ற நிலை உள்ளது.

இது கொலை செய்தவனிடமே நியாயம் கேட்பது போன்றது. எனவே புதிய வக்பு வாரிய திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த விவகாரங்களில், ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு எடுக்கலாம் என்றும், பெண்களுக்கும் வக்பு வாரியத்தில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

வங்க தேச வன்முறை: இந்த சட்ட திருத்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்படும் பொழுது பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான பொதுமக்கள் பயனடைவார்கள். இஸ்ரேல் - ஹமாஸ் தொடர்பான பிரச்சினையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் வங்க தேசத்தில் நடைபெறும் கலவரத்தில், அங்கு சிறுபான்மையினராக வாழும் இந்துக்கள் மீதும், அவர்களது வணிக நிறுவனங்கள், வீடுகள், கோயில்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்கள் குறித்து ஏன் கருத்தோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.

மோடி இல்லம் தாக்கப்படுமா?: இதன்மூலம் அவர்கள் மக்களும் விரோதி என்பது தெரிகிறது. பாஜக மட்டுமே உலகில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ஆதரவாக செயல்படுகிறது. வங்க தேசத்தில் நடப்பது போன்று இந்தியாவிலும் நடக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. வங்க தேசம் போலவே இந்தியாவிலும் பிரதமர் இல்லம் தாக்கப்படும் என்றும், வங்க தேசம் போலவே இந்துக்களும் தாக்கப்படுவார்கள் என கூறுகிறாரா?.

முத்தமிழ் முருகன் மாநாடு: இந்துக்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே இந்த கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே மத நல்லிணக்கத்தை விரும்பும் அனைவரும் இந்த கட்சிகளை அடியோடு ஒழிக்க பாடுபட வேண்டும். பழனியில் வருகிற 24, 25 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரவேற்கத்தக்கது. ஆனால் சமீபகாலமாக தொடர்ந்து முருகனை இழிவாக பேசி இந்து மதத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் திமுகவின் ஜால்ராவாக உள்ள சுகிசிவத்தை முன்னிறுத்தி ஏன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது?.

ஸ்டாலின் நெற்றியில் விபூதி பூசிக்கொள்ள வேண்டும்: இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள வருவதாக இருந்தால், முதலில் அவர் பழனி மலைக்கோயிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்துவிட்டு நெற்றியில் விபூதியை பூசிக்கொண்ட பின்னரே மாநாட்டிற்கு செல்ல வேண்டும். இல்லையென்றால் அவர் மாநாட்டிற்கு வரவே கூடாது. இந்துக்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்வதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமாவை முதலமைச்சர் குடும்பம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல, கோயில்களை திமுக மயமாக்க அமைச்சர் முயற்சி சேகர் பாபு செய்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். கோயில் கும்பாபிஷேகங்கள் பக்தர்களின் நன்கொடையில் நடைபெறுகிறது. கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து அகற்ற வேண்டும்.

தந்தையிடமிருந்து ஸ்டாலின் பாடம் கற்றுள்ளார்: உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி குறித்த விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது தந்தையிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளார். கருணாநிதி எப்படி கடைசிவரை ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்காமல் இருந்தாரோ, அதுபோலவே ஸ்டாலினும் நினைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிறுத்தி ஆண்டுதோறும் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு பழனியில் தடை விதித்தால் தடையை மீறி விழா நடக்கும்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், நிர்வாகிகள் ஆனந்த், வழக்கறிஞர் திருமலை சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

join ETV Bharat WhatsApp Channel click here
join ETV Bharat WhatsApp Channel click here (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்குவாதம் செய்த முன்னாள் அமைச்சர்; தருமபுரியில் நடந்தது என்ன? - ADMK Executives Clash

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.