ETV Bharat / state

தமிழகத்தில் பாஜக நிலை? ராகுல் காந்தி ஸ்டைலில் பதில் சொன்ன ஜோதிமணி! - Jothimani about BJP - JOTHIMANI ABOUT BJP

Karur MP Jothimani: தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறும் என கூறுவார்கள், ஆனால் ஒரு போதும் தமிழ்நாட்டு மண்ணில் காலூன்ற முடியாது என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை மற்றும் ஜோதிமணி கோப்பு படம்
அண்ணாமலை மற்றும் ஜோதிமணி கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 4:18 PM IST

சென்னை: கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி வெற்றி பெற்று, அதே தொகுதியில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார். இந்த நிலையில், இன்று மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த கரூர் எம்பி ஜோதிமணிக்கு, சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், திமுக மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி கூறுகையில், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரையும் 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று இருக்கிறது.

தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறும் என எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ஆனால், ஒரு போதும் எங்கள் தலைவர் (ராகுல்காந்தி) சொல்வதைப் போல் 'நெவர் எவர் பிஜேபி கம்மிங் டு தமிழ்நாடு'. தமிழ்நாட்டு மண்ணில் பாஜகவால் காலூன்ற முடியாது.

இந்தியா கூட்டணிக்கு தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள். இது நரேந்திர மோடிக்கும், பாஜகவிற்கும் எதிரான வாக்காகத்தான் உள்ளது. உண்மையான ஜனநாயகத்தில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி பிரதமரே வாக்கு எண்ணிக்கையின் போது முதல் நான்கு சுற்றில் பின்னடைவைச் சந்தித்து வேலையில் அவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரக்கூடாது. அதுதான் நியாயம் இந்தியா கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்யும்" என்றார்.

2வது முறையாக எம்பியாக தேர்வு: கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் 2வது முறையாக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் முதல் சுற்று துவங்கி இறுதி வரை நடந்த 25 சுற்றுகளிலும் தொடர்ந்து அனைத்து வேட்பாளர்களையும் பின்னுக்குத் தள்ளி, இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியே முன்னிலை வகித்து வந்தார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 5 லட்சத்து 34 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்றார். இதற்கு அடுத்தபடியாக, அதிமுக சார்பில் சார்பில் போட்டியிட்ட தங்கவேல் 3 லட்சத்து 68 ஆயிரத்து 90 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 816 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: தனி சின்னத்தில் வெற்றி...அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக உருவெடுக்கும் விசிக..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.