ETV Bharat / state

'வீடுகளை காலி செய்ய வேண்டாம்': பிபிடிசி அறிவிப்பால் மாஞ்சோலை தொழிலாளர்கள் மகிழ்ச்சி! - manjolai workers issue - MANJOLAI WORKERS ISSUE

BBTC new notice to manjolai workers: நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை மாஞ்சோலை தொழிலார்கள் வீடுகளை காலி செய்ய வேண்டாம் என பிபிடிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிபிடிசி நோட்டீஸ், மாஞ்சோலை தொழிலாளர்கள்
பிபிடிசி நோட்டீஸ், மாஞ்சோலை தொழிலாளர்கள் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 2:16 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி ஆகிய பகுதிகள் சிங்கப்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் 'தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' ( பிபிடிசி) என்ற தனியார் நிறுவனம் அங்கு தேயிலை தோட்டம் நடத்தி வந்தது.

இந்நிலையில், அந்த நிறுவனத்திற்கான குத்தகை காலம் 2028 ஆம் ஆண்டுடன் முடிவடைவதால் அந்தப் பகுதிகள் நீதிமன்றம் மூலம் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டதையடுத்து முன்கூட்டியே தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற பிபிடிசி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, தற்போது அங்கு சுமார் 500 தொழிலாளர்கள் பணி புரியும் நிலையில் அவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கப்பட்டு ஆக.7க்குள் வீடுகளை காலி செய்து கீழே இறங்கும்படி கூறியதுடன் 25% பண பலன்களும் வழங்கப்பட்டது.

ஆனால், சுமார் நான்கு தலைமுறைகளாக இங்கு வசிக்கும் தங்களுக்கு தேயிலை தோட்டத்தைத் தவிர வேறு வாழ்வாதாரம் கிடையாது எனவே நாங்கள் தொடர்ந்து இங்கேயே வசிக்கவும் தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி செய்து கொடுக்கும் வரை அவர்களை வெளியேற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் தொழிலாளர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். குறிப்பாக பிபிடிசி நிறுவனம் வீடுகளை காலி செய்ய ஆகஸ்டு 7ஆம் தேதி வரை காலக்கெடு விதித்திருந்தது. எனவே, வீடுகளை காலி செய்ய இன்னும் ஓரிரு வாரங்களே இருப்பதால் தொழிலாளர்கள் வேதனையில் இருந்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை வீடுகளை காலி செய்ய வேண்டாம் என தற்போது பிபிடிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீசில், '' உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்த இடைக்கால உத்தரவின் படி 75 சதவீதம் கருணைத் தொகையை நாகர்கோவில் உதவி தொழிலாளர் ஆணையரிடம் ( தோட்டங்கள்) டெபாசிட் செய்யப்படும். தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைநை சமர்ப்பித்து 75 சதவீத கருணை தொகையை தொழிலாளர் உதவி ஆணையரிடம் பெற்றுக் கொள்ளலாம். நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை குடியிருப்புகளை காலி செய்வது தொடர்பாக தீர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மீண்டும் ஒரு ஈழம்... காலியாகும் மாஞ்சோலை... கண்ணீரோடு விடைபெறும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.